இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கும் இவர் யார்? – முழு விவரம் இதோ

Vengatesh-Prasad
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்ற பிறகு எந்த ஒரு இந்திய கேப்டனாலும் இதுவரை ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என அடுத்தடுத்து இந்திய அணி ஐசிசி தொடர்களில் தோல்வி அடைந்த காரணத்தினால் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்தது மட்டுமின்றி தற்போது இந்திய அணியின் தேர்வு குழுவும் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.

Chetan Sharma

- Advertisement -

அந்த வகையில் சேத்தன் சர்மா தலைமையில் இயங்கி வந்த இந்திய அணியின் தேர்வுக்குழுவினை பிசிசிஐ அதிரடியாக நீக்கி தற்போது புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை பெற்று வந்தன. அந்த வகையில் இந்த புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான நயன் மோங்கியா, மணிந்தர் சிங், சிவசுந்தர் தாஸ், அஜய் ராத்ரா போன்றோர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேலும் முன்னாள் தமிழக வீரர் ஹேமந்த் பதானியும் இந்த புதிய பொறுப்பிற்கு விண்ணப்பித்ததாக செய்திகள் கசிந்த வேளையில் அவர் தான் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத்தும் இந்த புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இன்றி இவரே இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Venkatesh Prasad

அந்த வகையில் வெங்கடேஷ் பிரசாத் யார் இந்திய அணிக்காக எத்தனை காலம் விளையாடி உள்ளார் என்பது பற்றிய முழு தகவலை இங்கு காணலாம். அதன்படி இந்திய அணிக்காக கடந்த 1994-ஆம் ஆண்டு அறிமுகமான வெங்கடேஷ் பிரசாத் 2001-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். அவரது கரியரில் மொத்தம் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 96 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 171 போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த பணிகளையே செய்து வரும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கர்நாடக மற்றும் உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 வேறமாதிரி. ஒருநாள் கிரிக்கெட் வேறமாதிரி. சூரியகுமார் யாதவின் தவறை சுட்டிக்காட்டி எச்சரித்த – ரவி சாஸ்திரி

அத்துடன் மட்டுமின்றி இந்திய அணியின் தேர்வுக்குழுவில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவிலும் அவர் பணிபுரிந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் புதிய தேர்வுக்குழு தலைவராக அவருக்கு பதவி கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement