டி20 வேறமாதிரி. ஒருநாள் கிரிக்கெட் வேறமாதிரி. சூரியகுமார் யாதவின் தவறை சுட்டிக்காட்டி எச்சரித்த – ரவி சாஸ்திரி

Ravi-Shastri-and-SKY
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பார்மில் இருக்கிறார். அதோடு கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தற்போது உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் இந்த ஆண்டு மட்டும் டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அதோடு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியா சார்பாக இரண்டாவது இடத்தையும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

Suryakumar-Yadav-1

- Advertisement -

குறிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரே அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக விளையாடியிருந்தாலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து பயணித்த இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்ற டி20 போட்டியில் 111 ரன்களை விளாசி அனைவரையும் வியக்க வைத்தார்.

இப்படி டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முறையை 4, 34, 6 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நிலைப்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Suryakumar-Yadav

சூரிய குமார் யாதவ் இந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஸ்லிப் பகுதியில் இரண்டு முறை ஆட்டம் இழந்து வெளியேறினார். இது அனைத்து வீரர்களுக்கும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சூரியகுமார் யாதவ் நிச்சயம் சில விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் டி20 கிரிக்கெட் விட ஒருநாள் கிரிக்கெட் இரண்டரை மடங்கு பெரிது என்பதனால் இன்னும் கூடுதலாக களத்தில் நின்று அதிக பந்துகளை எதிர் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அப்படி நிறைய பந்துகளை பிடித்து நீண்ட நேரம் பேட்டிங் செய்யும் பட்சத்தில் இறுதி நேரத்தில் அதிரடி காண்பித்து ரன் குவிப்பை அதிகரிக்கலாம். எனவே டி20 கிரிக்கெட் போல முன்கூட்டியே பெரிய ஷாட்டுகளை விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் சற்று நேரம் எடுத்துக்கொண்டு அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாடினால் நிச்சயம் அவரிடம் இருந்து பெரிய ரன்கள் வரும். அதுமட்டுமின்றி தனது கரியரின் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் நிச்சயம் இந்த சில அட்ஜஸ்ட்மெண்ட்டை உடனடியாக செய்ய முடியும்.

இதையும் படிங்க : தோனிக்கு அடுத்து சென்னையை வழி நடத்தும் தகுதி அவர்கிட்ட இருக்கு – பயிற்சியாளர் மைக் ஹசி சூப்பர் கருத்து

அந்த வகையில் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் சூரியகுமார் யாதவும் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். இந்தியாவின் நான்காவது வீரராக தற்போது அவர் தனது இடத்தினை உறுதி செய்துள்ளார். மேலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் ஒரு தவிர்க்க முடியாத வீரராக இந்திய அணியில் வலம் வருவார் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement