உண்மையாவே ஆர்சிபி’க்கு கிடைக்காத சாதகம் எங்களுக்கு கிடைச்சுது.. ஈஸியா ஜெயிச்சுட்டோம்.. வெங்கடேஷ் ஐயர் பேட்டி

Venkatesh Iyer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 83* ரன்கள் எடுத்த உதவியுடன் 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய கொல்கத்தா அசால்டாக 16.5 ஓவரிலேயே வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* ரன்கள் எடுத்தனர். அதனால் கொல்கத்தாவுக்கு எதிராக தொடர்ந்து 9வது வருடமாக 6வது போட்டியில் தங்களுடைய சொந்த ஊரில் பெங்களூரு பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கொல்கத்தாவுக்கு சாதகம்:
இந்நிலையில் உண்மையாகவே இந்த போட்டியில் பெங்களூரு விளையாடிய போது கடினமாக இருந்த பிட்ச் 2வது இன்னிங்ஸ் தாங்கள் விளையாடிய போது பேட்டிங்க்கு சாதகமாக மாறியதாக வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். இது பற்றி போட்டியில் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் போட்டி நடைபெற நடைபெற அது நன்றாக மாறியது”

“குறிப்பாக பெவிலியன் பக்கம் நன்றாக மாறியது. சுனில் நரேனுக்கு பாராட்டுக்கள். அவர் விளையாடியதால் ஆரம்பத்திலேயே அழுத்தம் குறைந்தது. எனவே கடைசியில் நாங்கள் சம்பிரதாயங்களை முடித்தோம். ஓப்பனிங்கில் கிடைத்த நல்ல துவக்கத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எதிரணி இடது கை ஸ்பின்னரை பயன்படுத்தும் போது அதை அதிரடியாக எதிர்கொள்வது என்னுடைய கடமை”

- Advertisement -

“இங்கே என்னுடைய வருங்கால மனைவியும் உள்ளார். என் ஆட்டத்திற்கான பாராட்டுக்களை அவருக்கும் நான் கொடுக்க விரும்புகிறேன். விஜயகுமார் நன்றாக பந்து வீசினார். அவரை எதிர்கொள்வது மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது. பிட்ச்சில் வேகத்தை குறைத்து வீசும் போது எதிர்கொள்வது கடினமாக இருந்தது. நாங்களும் வேகமாக பந்து வீசும் போது கடினமாக இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: கிறிஸ் கெயிலை முந்திய விராட் கோலி.. சிக்ஸர்களை பறக்க விடுவதில் தனித்துவமான வரலாற்று சாதனை

அந்த வகையில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் கொல்கத்தா 2 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. மறுபுறம் 3 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்துள்ள பெங்களூரு பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி போராடினார். ஆனால் அவருக்கு எதிர்ப்புறம் எந்த பேட்ஸ்மேனும் பெரிய ரன்கள் அடித்து கை கொடுக்க தவறியதால் பெங்களூரு பரிதாபமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement