கிறிஸ் கெயிலை முந்திய விராட் கோலி.. சிக்ஸர்களை பறக்க விடுவதில் தனித்துவமான வரலாற்று சாதனை

Virat Kohli Chris gayle
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற 10வது லீக் போட்டியில் பெங்களூருவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு போராடி 20 ஓவரில் 182/6 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளேஸிஸ் 8, க்ரீன் 33, மேக்ஸ்வெல் 28 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக விராட் கோலி 83* (59) ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 183 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு துவக்க வீரர்கள் பில் சால்ட் 30 (20), சுனில் நரேன் 47 (22) ரன்கள் அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர் 50 (30), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* (24) ரன்கள் குவித்து 16.5 ஓவரிலேயே கொல்கத்தாவை எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

விராட் கோலியின் சாதனை:
அதன் காரணமாக தொடர்ந்து 9வது வருடமாக 6வது போட்டியில் பெங்களூருவை அதன் சொந்த சொந்த ஊரில் தோற்கடித்து வெற்றி பெற்ற கொல்கத்தா இந்த சீசனில் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் இந்த வருடம் இதற்கு முன் விளையாடிய 9 போட்டிகளிலும் சொந்த மண்ணில் களமிறங்கிய அணிகளே தொடர்ச்சியாக வென்று வந்தன.

அதையும் இப்போட்டியில் உடைத்துள்ள கொல்கத்தா சொந்த மண்ணில் பெங்களூருவுக்கு தோல்வியை பரிசளித்தது. மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்க தவறிய பெங்களூரு பந்து வீச்சில் மோசமாக செயல்பட்டு இந்த சீசனில் 2வது தோல்வியை பதிவு செய்தது. அதனால் விராட் கோலியின் போராட்டம் வீணானது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடிய போது துவக்க வீரராக களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 83* (59) ரன்கள் குவித்தார். குறிப்பாக பெங்களூரு அடித்த 182 ரன்களில் தனியாளாக 83 ரன்களை அடித்ததே விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் எந்தளவுக்கு கடினமாக இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

இதையும் படிங்க: 1000 தொடுவேன்னு நம்புறேன்.. சாதனை போட்டியில் ஆர்சிபி’யை தெறிக்க விட்ட சுனில் நரேன் பேட்டி

இருப்பினும் இப்போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து பெங்களூரு அணிக்காக இதுவரை விராட் கோலி 241 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 241*, பெங்களூருவுக்காக
2. கிறிஸ் கெயில் : 239, பெங்களூருவுக்காக
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 238, பெங்களூருவுக்காக
4. கைரன் பொல்லார்ட் : 223, மும்பைக்காக
5. ரோகித் சர்மா : 210, மும்பைக்காக
6. எம்எஸ் தோனி : 209, சென்னைக்காக

Advertisement