1000 தொடுவேன்னு நம்புறேன்.. சாதனை போட்டியில் ஆர்சிபி’யை தெறிக்க விட்ட சுனில் நரேன் பேட்டி

Sunil Narine
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 182/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 83* ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 2, ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதன் பின் 183 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* ரன்கள் எடுத்து 16.5 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் தங்களுடைய சொந்த ஊரில் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா அணியிடம் தொடர்ந்து 9வது வருடமாக 6வது போட்டியில் பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

500இல் ஆட்டநாயகன்:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி பந்து வீச்சில் 1 விக்கெட் எடுத்து பேட்டிங்கில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 47 (22) ரன்கள் குவித்து பெங்களூருவை தெறிக்கவிட்ட சுனில் நரேன் ஆட்டநாயகன் விருது வென்றார். சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டில் இது அவருடைய 500வது போட்டியாகும். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேசம், கரீபியன் லீக், ஐபிஎல் போன்ற அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் அவர் இதுவரை 500 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 500 போட்டியில் விளையாடிய முதல் சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் இன்று படைத்திருந்தார். அந்த சாதனை போட்டியில் அசத்திய தாம் 1000 டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்று சுனில் நரேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “500 போட்டிகளில் விளையாடியது நல்ல மைல்கல்”

- Advertisement -

“இங்கிருந்து என்னிடம் இன்னும் 500 போட்டிகள் வரும் என்று நம்புகிறேன். இது வெறும் தன்னம்பிக்கை மற்றும் பயிற்சியாளர்கள் கொடுக்கும் ஆதரவின் வெளிப்பாடாகும். அத்துடன் கடின உழைப்பும் உள்ளது. பவர் பிளே ஓவர்கள் மிகவும் கடினமான ஓவர்களாகும். இருப்பினும் அதில் நாம் சென்று இறுக்கமாக பந்து வீச வேண்டும். அது வெற்றி பெறும் போது உதவும்”

இதையும் படிங்க: 6 ஓவரில் 85 ரன்ஸ்.. 16.5 ஓவரிலேயே அடித்து துவம்சம் செய்த கொல்கத்தா.. 9வது வருடமாக ஆர்சிபி’க்கு நேர்ந்த பரிதாபம்

“எங்களுடைய அணியில் தாங்கள் விரும்புவதை செய்வதற்கான முழு சுதந்திரம் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். முன்னதாக கௌதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது இதே போல சுனில் நரேன் துவக்க வீரராக பட்டைய கிளப்பினார். அதே போல தற்போது கௌதம் கம்பீர் மீண்டும் கொல்கத்தாவின் ஆலோசகராக வந்ததும் அவர் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement