6 ஓவரில் 85 ரன்ஸ்.. 16.5 ஓவரிலேயே அடித்து துவம்சம் செய்த கொல்கத்தா.. 9வது வருடமாக ஆர்சிபி’க்கு நேர்ந்த பரிதாபம்

RCb vs KKR
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி பெங்களூருவில் 10வது லீக் போட்டி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் ஆரம்பத்திலேயே 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் எதிர்புறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் அவருடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 33 (21) ரன்களில் ரசல் வேகத்தில் போல்ட்டானார். அப்போது வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (19) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

மிரட்டிய கொல்கத்தா:
இருப்பினும் எதிர்புறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி அரை சதமடித்து போராடினார். ஆனாலும் எதிர்ப்புறம் வந்த ரஜத் படிதார் 3, அனுஜ் ராவத் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத விராட் கோலி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 83* (59) ரன்களும் தினேஷ் கார்த்திக் 3 சிக்சருடன் 20* (8) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 20 ஓவரில் பெங்களூரு 182/6 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 183 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு பின் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் ஆரம்பத்திலேயே பெங்களூரு பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்தனர். அதற்கு தகுந்தார் போல் ஆர்சிபி பவுலர்களும் சுமாராக பந்து வீசினர். அதை பயன்படுத்தி வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 6 ஓவரில் 85 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை பறித்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் அதில் சுனில் நரேன் அதிரடியாக 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 47 (22) ரன்களும் பில் சால்ட் 30 (20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் அவர்கள் கொடுத்த நல்ல துவக்கத்தை வீணடிக்காமல் கேப்டன் தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக 3 பவுண்டரி 4 சிக்சருடன் 50 (30) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் அவருடன் விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* (24) ரன்களும் ரிங்கு சிங் 5* (5) ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: நேரலையில் நெகிழ்ச்சி.. பகையை மறந்து 83 ரன்ஸ் அடித்த விராட் கோலிக்காக கம்பீர் செய்த அன்பான செயல்

அதனால் 16.5 ஓவரிலேயே 186/3 ரன்கள் எடுத்த கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இதனால் 2016க்குப்பின் தொடர்ந்து 9வது வருடமாக பெங்களூருவை அதனுடைய சொந்த ஊரான சின்னசாமி மைதானத்தில் 6வது தொடர்ச்சியான போட்டியில் தோற்கடித்து கொல்கத்தா அட்டகாசம் நிகழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த வருடம் நேற்று வரை நடந்த 9 போட்டிகளில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் மட்டுமே வெற்றி பெற்று வந்தன. அதையும் இன்று உடைத்துள்ள கொல்கத்தா சொந்த மண்ணில் பெங்களூருவுக்கு பரிதாப தோல்வியை பரிசளித்துள்ளது.

Advertisement