நேரலையில் நெகிழ்ச்சி.. பகையை மறந்து 83 ரன்ஸ் அடித்த விராட் கோலிக்காக கம்பீர் செய்த அன்பான செயல்

gambhir kohli
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி பெங்களூருவில் 10வது லீக் போட்டி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 8 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக வந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாட முயற்சித்து 33 (21) ரன்களில் ரசல் வேகத்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:
அப்போது வந்த கிளன் மேக்ஸ்வெல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (19) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ரஜத் படிடார் மீண்டும் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி அரை சதமடித்து பெங்களூரு பெரிய ரன்கள் குவிக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்தார்.

அந்த சமயத்தில் 16வது ஓவர் முடிவில் தண்ணீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது களத்திற்குள் வந்த கொல்கத்தா அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் அங்கிருந்த விராட் கோலி அருகே சென்று தாமாக பேசினார். அவரது தோள் மீது விராட் கோலியும் கை போட்டு பேசியது மொத்த ரசிகர்களையும் ஆரவாரப்படுத்தியது. அப்போது அரை சதமடித்ததற்காக விராட் கோலிக்கு சிரித்த முகத்துடன் கௌதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

ஏனெனில் கடந்த வருடம் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் அவர்கள் சண்டையிட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இந்தியாவுக்காக 2011 உலகக் கோப்பை உட்பட பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். ஆனால் 2012 ஐபிஎல் தொடரில் அந்த இருவருக்கும் சண்டை ஏற்பட்டது எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க: இதான் வாழ்க்கையா.. அமெரிக்காவில் அண்டர்-19 இந்திய கேப்டனுக்கு நேர்ந்த சோகம்.. அநீதிக்கு எதிராக கொதிப்பு

அப்போதிலிருந்தே அவர்கள் எலியும் பூனையும் போல் அவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அந்த பழைய பகையை மறந்த கம்பீர் இன்று விராட் கோலியை பாராட்டியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய விராட் கோலி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 83* (59) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 182/6 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement