இதான் வாழ்க்கையா.. அமெரிக்காவில் அண்டர்-19 இந்திய கேப்டனுக்கு நேர்ந்த சோகம்.. அநீதிக்கு எதிராக கொதிப்பு

Unmukth Chand
- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக்த் சந்த் கடந்த 2012 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக கேப்டனாக வென்று சாதனை படைத்தவர். அதன் காரணமாக 2010 முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடிய அவர் அடுத்த விராட் கோலியாக வருவார் என்று அந்த சமயங்களில் பேச்சுக்கள் காணப்பட்டது. இருப்பினும் நாளடைவில் ஐபிஎல் தொடரில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதனால் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தையே சந்தித்தார். அதனால் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் தொடரில் விளையாடிய அவர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து மேஜர் லீக் டி20 தொடரிலும் விளையாடினார்.

- Advertisement -

அமெரிக்காவிலும் பரிதாபம்:
அப்படியே அமெரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அவர் மேஜர் லீக் டி20 தொடரில் 45 இன்னிங்சில் 1500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதனால் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்காக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கனடாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடருக்கான அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2012 அண்டர்-19 உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாடிய மிலிந் குமார், ஹர்மீத் சிங் போன்ற இந்திய வீரர்களை தேர்வு செய்த அமெரிக்க வாரியம் உன்முக்த் சந்த்தை கழற்றி விட்டுள்ளது. இதே காரணத்தால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் போவதற்கு 99% வாய்ப்புகள் உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதனால் இந்தியாவில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பார்த்தால் தற்போது அவருக்கு அமெரிக்காவிலும் வாய்ப்பு கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் தமக்கு வாய்ப்பு கொடுக்காத தரமான இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வத்துடன் இருப்பதாக சந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் கடைசியில் அவருடைய அந்த கனவும் உடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: நீங்க செய்ஞ்ச தப்புக்கு பாவம் அவரை ஏன் திட்டுறீங்க அஷ்வின்.. களத்தில் கோபத்தை காண்பித்த அஷ்வின் – என்ன நடந்தது?

இந்நிலையில் அமெரிக்காவிலும் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி ட்விட்டரில் அவர் சோகமாக பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இதுவே வாழ்க்கையின் முரண்பாடு. நியாயமற்ற சிஸ்டங்களை பற்றியும் ஆரோக்கியமான மாற்றங்களின் தேவை பற்றியும் மக்கள் கிசுகிசுப்பதை நான் தொடர்ந்து கேட்கிறேன். ஆனால் அதே மக்கள் ஆட்சிக்கு வந்ததும் அநீதியான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். எனவே மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்து எது சரியானது என்பதில் உறுதியாக நிற்க வேண்டிய நேரம் இதுவாகும்” என்று கூறியுள்ளார்.

Advertisement