நீங்க செய்ஞ்ச தப்புக்கு பாவம் அவரை ஏன் திட்டுறீங்க அஷ்வின்.. களத்தில் கோபத்தை காண்பித்த அஷ்வின் – என்ன நடந்தது?

Ashwin-and-Jaiswal
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் சற்றும் குறைவின்றி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து வெற்றி நடைபோட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ரியான் பராக் 84 ரன்களையும், அஸ்வின் 29 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே குவித்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் டெல்லி அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடி வந்த வேளையில் அஸ்வின் வீசிய ஒரு ஓவரில் டேவிட் வார்னர் பந்தை தட்டிவிட்டு சிங்கிள் ஓட நினைத்தார். அந்த பந்தினை பிடித்த ஜெய்ஸ்வால் அஸ்வினை நோக்கி த்ரோ செய்தார்.

- Advertisement -

அந்த பந்தை அஸ்வின் பிடிக்காமல் போனார். இதனால் எளிதாக கிடைத்த ரன் அவுட் வாய்ப்பு தவறி போனது. ஜெய்ஸ்வால் த்ரோ செய்த பந்தை அஸ்வின் தான் கணிக்க முடியாமல் தவற விட்டு கையால் ஸ்டம்பை தட்டினார். ஆனால் ஜெய்ஸ்வால் ஏதோ தவறு செய்தது போன்று அவரை மைதானத்தில் கடிந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : தொட்டதெல்லாம் தங்கமாச்சு.. ஜெய்ஸ்வால் பற்றிய மைக்கேல் வாகன் கருத்துக்கு.. அஸ்வின் கரியை பூசும் பதிலடி

எப்போதுமே இளம் வீரர்கள் மத்தியில் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அஸ்வின் இப்படி ஜெயிஸ்வாலை களத்திலேயே கடிந்தது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இருப்பினும் அஸ்வின் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதனால் ஜெய்ஸ்வால் இதைப்பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்க மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement