தொட்டதெல்லாம் தங்கமாச்சு.. ஜெய்ஸ்வால் பற்றிய மைக்கேல் வாகன் கருத்துக்கு.. அஸ்வின் கரியை பூசும் பதிலடி

Ashwin and Vaughan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமான மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் வெல்வது எப்போதுமே கடினமாக இருக்கும்.

ஆனால் அங்கேயும் 2018/19, 2020/21 அடுத்தடுத்த வருடங்களில் 2 கோப்பைகளை வென்ற இந்தியா இம்முறையும் வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் தொடர்நாயகன் விருது வென்று தங்களை வீழ்த்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க முடியுமா என்ற கேள்வியை அஸ்வினிடம் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் எழுப்பினார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
குறிப்பாக சொந்த மண்ணில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய ஜெய்ஸ்வால் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவதால் சாதிக்க முடியாது என்ற வகையில் மைக்கேல் வாகன் கூறினார். அதற்கு அஸ்வின் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “இந்த கதையின் பகுதியை கேட்டு நான் சிரிக்கிறேன். குறிப்பாக இந்தியாவில் வல்லுனர்கள் என்ற பெயரில் பலரும் இதே கருத்தை சொல்வார்கள்”

“அதாவது ஹேய் இவர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, போன்ற வெளிநாடுகளில் அசத்தும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்று சொல்வார்கள். இதை நான் வேடிக்கையாக பார்க்கிறேன். ஏனெனில் ஒருவர் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பும் வரை நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள். யாராவது தோல்வியடைய மாட்டார்களா என்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் சர்வதேச கிரிக்கெட்டின் அழகு. வாழ்க்கை என்பது புதிய விஷயங்களை கற்பதாகும்”

- Advertisement -

“ஜெயஸ்வால் பந்தை இயற்கையாக அடிக்கக்கூடிய பரிசளிக்கப்பட்ட வீரர். அவர் இதுவரை தொட்டதெல்லாம் தங்கமாகியுள்ளது. ஆனால் அவருக்கும் தோல்வியை சந்திப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். வெற்றி பெற என்ன தேவை என்பதையும் பார்க்கவும். அது தான் கிரிக்கெட்டின் அற்புதமான இயல்பு. ஆஸ்திரேலியா போன்ற அனைத்து இடங்களிலும் அசத்துவதற்கான கருவிகள் ஜெய்ஸ்வாலிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: தோனி பேட்டிங் செய்யலயேன்னு கவலைப்படாதீங்க.. இப்போவும் அதை ஒரு நொடில செய்றாரு.. ப்ராட், ஸ்மித் கருத்து

“அங்கே அவருக்கு தோல்விகள் கூட கிடைக்கலாம். ஆனால் அதனால் மதிப்புமிக்க பாடங்களை அவர் கற்றுக் கொள்வார். அதனால் இப்போது இருப்பதை விட அவர் இருமடங்கு சிறந்த வீரராக உருவெடுப்பார். அவர் ரன்கள் அடிப்பாரா இல்லையா என்பதை நேரம் தான் சொல்லும். ஆனால் அது அவருக்கு விலைமதிப்பற்ற அனுபவத்தை கொடுக்கும். அது இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் அதிகமான மதிப்பை கொடுக்கும். எனவே இப்போதே ஜெய்ஸ்வால் அப்படி செய்வார் இப்படி விளையாடுவார் என்று சொல்வது முதிர்ச்சியற்ற தன்மை என்று நினைக்கிறேன்” என யூடியூப் நிகழ்ச்சியில் பேசினார்.

Advertisement