தோனி பேட்டிங் செய்யலயேன்னு கவலைப்படாதீங்க.. இப்போவும் அதை ஒரு நொடில செய்றாரு.. ப்ராட், ஸ்மித் கருத்து

Steve Smith and Broad
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தி வருகிறது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டுமே விளையாடி வருகிறார்.

மேலும் கடந்த வருடமே முழங்கால் வலியால் பேட்டிங் செய்வதற்காக கடைசி நேரத்தில் மட்டுமே களமிறங்கிய அவர் ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். அந்த சூழ்நிலையில் இம்முறை 42 வயதை தாண்டி விட்டதால் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தோனி ஒரேடியாக 8வது இடத்தில் களமிறங்கும் முடிவை எடுத்துள்ளதால் இதுவரை ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து வருகிறது.

- Advertisement -

இப்போதும் தோனி:
இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்யாவிட்டாலும் களத்தில் வெற்றியை ஒரு நொடியில் மாற்றும் அளவுக்கு தேவையான முக்கிய முடிவுகளை தோனி எடுத்து வருவதாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். மேலும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் கொடுத்த கேட்சை 0.60 நொடியில் 2.27 மீட்டர் தாவி தோனி பிடித்தது சென்னை ரசிகர்களை கொண்டாட வைத்ததாக பிராட் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதும் அவர் நன்றாக செயல்படுகிறார் அல்லவா? அவர் இந்த விளையாட்டின் லெஜெண்ட. தோனியை பற்றி நான் உணர்கிறேன். அதாவது இப்போதும் அவர் பேட்டிங் செய்யாமலேயே ஆட்டத்தை ஒரு நொடிக்குள் தங்களுக்கு சாதகமாக மாற்றும் தருணத்தை நிர்வகிக்கிறார். சிஎஸ்கே அணியினர் அவருக்காக திரண்டு மகிழ்ச்சியடைகின்றனர்”

- Advertisement -

“சென்னையில் உள்ள மக்கள் அதை விரும்புகின்றனர். அது சிறந்த தருணமாகும்” என்று கூறினார். அதே கேட்ச் பற்றி ஸ்டீவ் ஸ்மித் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “2.27 மீட்டர் தாவிப் பிடித்ததாக நேரலையில் காட்டப்பட்டது. அது சிறப்பான கேட்ச். டேரில் மிட்சேல் வேகமான பவுலர் கிடையாது என்பதால் தோனி அதை சரியாக கணித்து சற்று முன்னதாக நின்றார். அதனால் வேகமாக வரும் பந்தை பிடிப்பதற்கான நேரம் குறைவாகவே இருக்கும்”

இதையும் படிங்க: 16 வயது இளம்வீரரை மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – யாருக்கு பதிலாக தெரியுமா?

“ஆனாலும் அதை அவர் பிடித்தார் அல்லவா? மைதானத்தை சரியாக கவர் செய்த அவர் வலது கையில் கச்சிதமாக பந்தை பிடித்தார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய 3வது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது. மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ள அந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement