16 வயது இளம்வீரரை மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – யாருக்கு பதிலாக தெரியுமா?

KKR
- Advertisement -

இந்தியாவில் தற்போது 17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாகவும், சில வீரர்கள் தனிப்பட்ட சூழல் காரணமாகவும் இந்த தொடரில் இருந்து விலகியிருந்தனர். இவ்வேளையில் காயம் அடைந்த வீரர்களுக்கு பதிலாக தொடர்ச்சியாக பல்வேறு வீரர்கள் மாற்று வீரர்கள் ஒப்பந்தமாகி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பிரசித் கிருஷ்ணாவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முஜிபுர் ரஹ்மானும் காயம் காரணமாக வெளியேறி உள்ளனர். அதன் காரணமாக அவர்களுக்கான மாற்று வீரர்களை சம்பந்தப்பட்ட அணிகளின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக தென்னாப்பிரிக் வீரர் கேசவ் மகாராஜையும், முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக அல்லாஹ் கஸான்பர் என்ற வீரரும் மாற்றுவீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ள இந்த அல்லாஹ் கஸான்பர் குறித்த விவரம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 16 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஆர்கானிஸ்தானை சேர்ந்த வீரரான அல்லாஹ் கஸான்பர் ஆப்கானிஸ்தான் அணிக்காக இந்த ஆண்டே அறிமுகமாகியவர்.

- Advertisement -

இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் மேலும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அனுபவம் குறைந்தவர் என்றாலும் சுனில் நரேன் போன்று மிஸ்டரி ஸ்பின்னர் என்பதனால் அவரை கொல்கத்தா நிர்வாகம் அணிக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க : டிவியில் பாக்க ஈஸியா தெரியும் ஆனா.. அதுக்காக கைதட்டி பாராட்டுங்க.. ஜடேஜா பற்றி தோனி நெகிழ்ச்சி பேட்டி

இருப்பினும் ஏற்கனவே கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனில் சுனில் நரேன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இருப்பதனால் அல்லாஹ் கஸான்பருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு இந்த ஆண்டு கிடைப்பது மிகவும் கடினம் தான் என்றே தெரிகிறது.

Advertisement