டிவியில் பாக்க ஈஸியா தெரியும் ஆனா.. அதுக்காக கைதட்டி பாராட்டுங்க.. ஜடேஜா பற்றி தோனி நெகிழ்ச்சி பேட்டி

MS Dhoni 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை கண்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் 2024 தொடரில் தோனி தலைமையில் விளையாடிய சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது.

குறிப்பாக குஜராத்துக்கு எதிராக அஹமதாபாத் மைதானத்தில் மழையால் 3 நாட்கள் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் சென்னை 15 ஓவரில் 171 ரன்களை சேசிங் செய்தது. அப்போது டேவோன் கான்வே, ருதுராஜ், ரகானே, ராயுடு, துபே ஆகிய அனைவரும் முக்கிய ரன்கள் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 4 பந்துகளில் சென்னை 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

தோனி பாராட்டு:
அதனால் வெற்றி பறிபோய் விட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தோனியும் பவுண்டரி எல்லையில் தோல்வியை பார்க்க முடியாமல் கண்ணை மூடி அமர்ந்திருந்தார். ஆனால் 5வது பந்தில் அபாரமான சிக்ஸர் அடித்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அப்போது ஜடேஜாவை தனது இடுப்பில் தூக்கி வைத்து தோனி உணர்ச்சி பொங்க பாராட்டியது மறக்க முடியாததாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ஜடேஜாவை பற்றி தோனி பாராட்டி பேசியது பின்வருமாறு. “அந்த சூழ்நிலையில் இலக்கை தொடுவதற்கான தன்னம்பிக்கையும் மனநிலையும் ஜடேஜாவிடம் இருப்பதாக நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். ஆனாலும் கண்டிப்பாக அது நடக்கும் என்று சொல்ல முடியாது. அது மறக்க முடியாத இன்னிங்ஸ். கடைசி பந்துக்கு முன்பாக அவர் அடித்த சில சிக்ஸர்கள் மிகவும் கடினமானது”

- Advertisement -

“அதை டிவியில் பார்க்கும் போது எளிதாக தெரியும். ஆனால் தற்போது லோயர் மிடில் ஆர்டரில் விளையாடும் எனக்கு அந்தக் கோணத்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். அந்த நேரத்தில் எதிரணியும் எங்களைப் போலவே வெற்றி பெற விரும்பினார்கள். எனவே அந்த வெற்றி அனைவருடைய கடின உழைப்பின் பரிசாகும். இறுதியில் நாங்கள் வெற்றியின் பக்கத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி”

இதையும் படிங்க: ஐபிஎல் இன்னும் 3 வருஷத்துல நடக்காதுன்னு அந்த நியூஸிலாந்து வீரர் சொன்னாரு.. அஸ்வின் பகிர்ந்த பின்னணி

“அந்த வகையில் பேட்டிங் செய்த விதத்திற்கு ஜடேஜாவுக்கு பெரிய கைத்தட்டல்” என்று சொன்னதும் அரங்கத்தில் இருந்தவர்கள் ஜடேஜாவை கைதட்டி பாராட்டினர். அதே நிகழ்ச்சியில் தோனியை பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் ஷாக்சி அண்ணிக்குப் பின் மஹி பாய் தூக்கி ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன் என்று நம்புகிறேன்” என சொன்னதும் தோனி உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர்.

Advertisement