ஐபிஎல் இன்னும் 3 வருஷத்துல நடக்காதுன்னு அந்த நியூஸிலாந்து வீரர் சொன்னாரு.. அஸ்வின் பகிர்ந்த பின்னணி

R Ashwin 3
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் 2024 டி20 தொடர் மகிழ்வித்து வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 16 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டின் அட்டவணையை மாற்றியமைக்கும் அளவுக்கு ஐபிஎல் இன்று நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் சில நேரங்களில் ஐபிஎல் என்பது கிரிக்கெட்டா என்ற கேள்வி தமக்கு வரும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட்டுக்கு நிகராக விளம்பரங்களில் நடிப்பது, அதற்காக நீண்ட பயிற்சிகளை எடுப்பது போன்ற அம்சங்களும் பின்புலத்தில் நடக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் நடக்காது:
அத்துடன் 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் 3 வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காமல் நிற்க முடியாமல் முடிந்து விடும் என்று நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தம்மிடம் கூறிய பின்னணியும் அஸ்வின் பகிர்ந்துள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரராக ஐபிஎல் தொடருக்கு வந்த போது நான் நட்சத்திர வீரர்களிடமிருந்து தேவையான விஷயங்களை கற்றுக்கொள்ள பார்த்தேன்”

“அதனால் 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் எப்படி இருக்கும் என்று நான் எப்போதும் பார்த்ததில்லை. கடந்த பல சீசன்களாக விளையாடி வரும் நான் ஐபிஎல் என்பது மிகப்பெரியது என்று சொல்வேன். சில நேரங்களில் ஐபிஎல் என்பது கிரிக்கெட்டா என்ற ஆச்சர்யமும் எனக்கு ஏற்படும். ஏனெனில் அதன் பின்புலத்தில் நிறைய விஷயங்கள் நடைபெறும். நாங்கள் விளம்பரங்களில் நடிப்பதற்காக பயிற்சிகளை எடுப்போம்”

- Advertisement -

“எனவே இந்தளவுக்கு ஐபிஎல் வளரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சிஎஸ்கே அணியில் அணியில் ஆரம்ப காலத்தில் விளையாடிய போது ஸ்காட் ஸ்டைரிஸிடம் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆரம்ப சீசன்களில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் 2 – 3 வருடங்களை தாண்டி நடக்காது என்று நினைத்ததாக என்னிடம் சொன்னார். ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் பெரிய பணம் ஊடுருவியது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவரு எவ்ளோ பெரிய ஜாம்பவான்.. அவரை இப்படித்தான் ட்ரீட் பண்ணுவீங்களா? – ஹார்டிக் பாண்டியாவை எச்சரிக்கும் ரசிகர்கள்

முன்னதாக ஐபிஎல் ஆரம்பத்தில் 8 அணிகள் 60 போட்டிகளில் விளையாடிய தொடராக நடைபெற்ற வந்தது. தற்போது 10 அணிகள் 74 போட்டிகளில் விளையாடும் தொடராக ஐபிஎல் வளர்ந்துள்ளது. ஐபிஎல் தொடருக்காக பல வெளிநாட்டு வாரியங்கள் தங்களுடைய சர்வதேச அட்டவணையை 2 மாதங்கள் தள்ளிப் போடுகின்றன. ஐபிஎல் தொடரால் அதிகப்படியான வருமானம் கிடைப்பதால் ஐசிசியும் அதற்கு பச்சைக் கொடி காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement