சுப்மன் கில்லும் இல்ல.. ஜெய்ஸ்வாலும் இல்ல.. இந்திய அணியின் வருங்கால சூப்பர் ஸ்டார் அவர்தான் – வெங்கடேஷ் ஐயர் புகழாரம்

venkatesh iyer 1
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இந்த 2023-ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவத்திலும் இந்த ஆண்டு சதம் அடித்து அசத்திய அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்து அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பையை கைப்பற்றினார்.

Ishan Kishan and Gill

- Advertisement -

அதுமட்டுமின்றி 23 வயதான இவர் இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தற்போது நிலையான இடத்தினை பிடித்து இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். அதேபோன்று ராஜஸ்தான் அணியின் இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரரான 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்ததுடன் அன்கேப்டு பிளேயராக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் சுப்மன் கில் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இல்லை என்றும் இந்திய அணிக்கான அடுத்த வருங்கால சூப்பர் ஸ்டாராக மாறப்போவது ரிங்கு சிங் தான் என்று தெரிவித்துள்ளார்.

Rinku-Singh

இது குறித்து அவர் கூறுகையில் : எங்களது கொல்கத்தா அணியில் மிகவும் விரும்பப்படும் வீரராக தற்போது ரிங்கு சிங் திகழ்ந்து வருகின்றார். மிகச் சிறந்த திறமை டேலன்ட் மற்றும் அருமையான பேட்டிங் டெக்னிக் கொண்ட அவர் தற்போது மிக சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை இந்திய அணியின் வருங்கால சூப்பர் ஸ்டாராக மாறுவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது. அவருடைய கடின உழைப்பும், பயிற்சியும் நிச்சயம் அவரை இந்திய அணியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று வெங்கடேஷ் ஐயர் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : திறமைல்லாம் ஒன்னுல்ல, 1983 உலக கோப்பைய இந்தியா அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சாங்க – வெ.இ ஜாம்பவான் அதிரடி பேட்டி

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 இந்திய அணியில் தேர்வு செய்யப்பட அதிக அளவு வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படும் வேளையில் வெங்கடேஷ் ஐயர் அவரை பாராட்டியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 474 ரன்கள் குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement