திறமைல்லாம் ஒன்னுல்ல, 1983 உலக கோப்பைய இந்தியா அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சாங்க – வெ.இ ஜாம்பவான் அதிரடி பேட்டி

Mohinder Amarnath Kapil Dev 1983 World Cup
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா முதன்மை அணியாக திகழ்வதற்கு கடந்த 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் கோப்பையை வென்றதே ஆழமான விதையை போட்டது என்று சொல்லலாம். குறிப்பாக அத்தொடரில் கத்துக்குட்டியாக களமிறங்கிய இந்தியா 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று அந்த சமயத்தில் உலகின் அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கி அசுரனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸை லீக் சுற்றிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியிலும் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்து சச்சின் போன்ற இளம் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.

அந்த தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனி ஒருவனாக 175* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த கபில் தேவ் ஃபைனலில் அதிரடியாக விளையாடி அச்சுறுத்தலை கொடுத்த ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் பிடித்தது இன்றும் பிரபலமாக பேசப்படுகிறது. அதே போல் நாக் அவுட் சுற்றில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்ற மோஹிந்தர் அமர்நாத் ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த தமிழகத்தின் கிறிஸ் ஸ்ரீகாந்த் போன்ற அனைவருமே தங்களது முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி அந்த தொடரில் இந்தியாவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அதிர்ஷ்டமான வெற்றி:
இந்நிலையில் இந்தியாவிடம் தோற்ற அந்த 2 போட்டிகளை தவிர்த்து 1975, 1979, 1983 ஆகிய 3 உலகக் கோப்பைகளில் தொடர் வெற்றிகளால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான அணியாக இருந்ததாக ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ் கூறியுள்ளார். மேலும் 1983 உலக உலகக்கோப்பையில் அதிர்ஷ்டத்தின் மிகப்பெரிய உதவியால் வென்ற இந்தியாவை அதே வருடத்தில் அதன் சொந்த மண்ணில் 6 – 0 (6) என்ற கணக்கில் துவம்சம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நாம் நாங்கள் இந்தியாவிடம் தோற்றோம். அது கிரிக்கெட்டை எப்போதும் கணிக்க முடியாதது என்பதை காண்பிக்கும் தருணமாக அமைந்தது. அதில் நீங்கள் சில நாட்கள் வெல்லலாம் சிலவற்றில் தோற்கலாம். எனவே அனைத்து போட்டிகளையும் நியாயமாக வெல்வதற்கு தயாராக இருந்த நாங்கள் தோல்வியை சந்திக்கவும் தயாராகவே இருந்தோம். இருப்பினும் நாங்கள் ஒரு மிகச் சிறப்பான அணியால் தோற்கடிக்கப்படவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சமயத்தில் யார் மேலே இருக்கிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்”

- Advertisement -

“அந்த வகையில் அப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா எங்களை முந்தி விட்டது. 1983 உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் தோற்கும் வரை அனைவரும் கிரிக்கெட்டை அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்பாக பார்த்ததில்லை. அந்தத் தொடரில் நாங்கள் 2 முறை தோற்கடிக்கப்பட்டோம். சொல்லப்போனால் 1975 – 1983 வரை நாங்கள் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோற்றோம். அந்த 2 போட்டிகளிலும் இந்தியா எங்களை தோற்கடித்தது. ஃபைனலில் நாங்கள் நல்ல ஃபார்மில் இருந்தும் மோசமான போட்டியாக அமைந்தது”

“அதே சமயம் 1983இல் அதிர்ஷ்டம் முழுவதுமாக இந்தியாவின் பக்கம் இருந்தது. ஏனெனில் மகத்தான அணியை கொண்டிருந்த நாங்கள் 1983இல் மட்டும் அந்த 2 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தோற்றோம். ஆனால் அடுத்த 5 – 6 மாதங்களில் நாங்கள் இந்தியாவை 6 – 0 என்ற கணக்கில் தோற்கடித்தோம். எனவே 180 போன்ற குறைவான ரன்களை எடுத்த பின்பும் அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் சென்றது. அதனால் அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம். ஆனால் மோசமாக தோற்கடிக்கப்படவில்லை”

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரை ஓரம்கட்ட வங்கதேச வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு – வெளிநாடுகளுக்கு முன்னோடியான முடிவு

“அது அதீத தன்னம்பிக்கையோ அல்லது மனநிறைவோ இல்லை. மேலும் ரிச்சர்ட்ஸ் அவுட்டானதும் எங்களால் மீண்டு வர முடியவில்லை. 1975, 1979 ஃபைனல்களில் முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 1983இல் சேசிங் செய்ததே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அத்துடன் இந்திய அணியில் எந்த வீரர்களும் எங்களை கவரவில்லை. ஏனெனில் அவர்கள் யாருமே அரை சதம் கூட அடிக்கவில்லை. அதே போல் அவர்களுடைய பவுலர்களில் யாருமே 4 – 5 விக்கெட்டுகளை எடுக்கவில்லை. பொதுவாக பேட்ஸ்மேன் டாப் இன்னிங்ஸ் விளையாடும் போது உங்களை கவர்வார். ஆனால் இந்திய தரப்பில் அவ்வாறு யாரும் அன்றைய நாளில் செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement