- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துபேவின் இடத்துக்கு ஆபத்து.. 2 பந்தில் 2 விக்கெட்.. இங்கிலாந்தில் வெற்றியை தலைகீழாக மாற்றிய வெங்கடேஷ்

இங்கிலாந்தில் 2024 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இளம் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் லேன்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த நிலையில் மான்செஸ்டர் நகரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வோர்சேஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் லேன்க்ஷைர் விளையாடியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லேன்க்ஷைர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 237 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜோஸ் போகண்ணன் 87, பால்டர்சன் 50 ரன்கள் எடுத்தனர். வோர்சேஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக டாம் ஹின்லி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 238 ரன்களை துரத்திய வோர்சேஸ்டர்ஷைர் அணிக்கு கேப்டன் ஜாக் லிப்பி 83, டாம் டெய்லர் 41 ரன்கள் எடுத்துப் போராடி அவுட்டானார்கள். இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் கடைசியில் டாம் ஹின்லி அதிரடியாக விளையாடி சவாலை கொடுத்தார்.

- Advertisement -

பந்து வீச்சில் மேஜிக்:
அதனால் கடைசி 12 பந்துகளில் 2 விக்கெட்டுகளை கையில் வைத்திருந்த வோர்சேஸ்டர்ஷைர் அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 49வது வீசிய வெங்கடேஷ் ஐயர் 2 பவுண்டரி 2 ஒய்ட் 2 சிங்கிள்களை வழங்கினார். அதனால் வோர்சேஸ்டர்ஷைர் அணிக்கு கடைசி 8 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அப்போது 24 (18) ரன்கள் அடித்து சவாலை கொடுத்த டாம் ஹின்லியை அவுட்டாக்கிய வெங்கடேஷ் ஐயர் அடுத்ததாக வந்த ஹரி டார்லியையும் கோல்டன் டக் அவுட்டாகினார்.

அதனால் லேன்க்ஷைர் அணி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த வகையில் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்த வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கிலும் 25 ரன்கள் அடித்து தன்னுடைய அணிக்கு கை மீறிய வெற்றியை மீண்டும் பெற்றுக்கொடுத்தார். 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் நாளடைவில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாடாத போது இந்திய அணி நிர்வாகமும் அவரை ஆல் ரவுண்டராக உருவாக்க முயற்சித்தது. இருப்பினும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தத் தவறிய வெங்கடேஷ் ஐயர் அப்படியே கழற்றி விடப்பட்டார். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த அவர் கொல்கத்தா 3வது கோப்பை வெல்ல உதவினர்.

இதையும் படிங்க: மொத்தமாக இந்தியாவை விட்டு வெளியேறப்போகும் விராட் கோலி – எந்த நாட்டில் செட்டில் ஆகப்போறார் தெரியுமா?

தற்போது இங்கிலாந்து தொடரிலும் அசத்தத் துவங்கியுள்ள அவருக்கு இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் புதிய பயிற்சியாளராக வந்துள்ள கௌதம் கம்பீர் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார். அதே போல சுமாராக செயல்படும் சிவம் துபேவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரையும் அவர் கொண்டு வந்தால் ஆச்சரியப்படுவதில்லை.

- Advertisement -