இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தற்போது கவனம் செலுத்திய விளையாடி வரும் விராட் கோலி தனது கரியரின் கடைசி அத்தியாத்தை நெருங்கி விட்டார் என்றே கூறலாம். ஏனெனில் தற்போது 35 வயதாகும் அவர் இன்னும் ஒரு சில ஆண்டுகளே விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் தற்போது விராட் கோலி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட விராத் கோலி தனது ஆரம்பகட்ட கிரிக்கெட்டின் போது டெல்லி அணிக்காக விளையாடி அங்கேயே தனது குடும்பத்துடன் தங்கி வந்தார்.
அதன் பிறகு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு அனுஷ்காவின் திரை வாழ்க்கைக்காகவும் தனது கரியரின் பயணத்திற்காகவும் மும்பையில் குடியேறிய அவர் தற்போது வரை மும்பையிலேயே இருந்து வருகிறார். ஆனால் இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் லண்டன் சென்று குடியேற இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இந்தியாவில் எங்கும் இந்த ஜோடியால் சுதந்திரமாக செல்ல முடிவதில்லை என்று ஏற்கனவே அவர்கள் சில பேட்டிகளில் கூறியுள்ளனர். அது தவிர்த்து லண்டனில் இருந்தால் தாங்கள் சுதந்திரமாக இருக்க முடிகிறது என்றும் எங்கு வேண்டுமென்றாலும் சாதாரணமாக நடந்து செல்ல முடிகிறது என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இதன்காரணமாகவே அனுஷ்கா சர்மா தனது இரண்டாவது குழந்தையை லண்டனில் பெற்று எடுத்தார்.
குழந்தை பிறந்த பிறகும் கடந்த சில மாதங்களாகவே அனுஷ்கா சர்மா லண்டனில் இருந்து வரும் வேளையில் விராட் கோலி அவ்வப்போது லண்டனுக்கு சுற்றுலா சென்று வருகிறார். தற்போது இலங்கை தொடர் முடிந்த பின்னும் அவர் லண்டன் சென்றுள்ளதால் அவர் அங்கேயே நிரந்தரமாக தங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள தனது சில சொத்துக்களை விற்றுள்ள விராத் கோலி லண்டனில் புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும் அங்கு தனது பெயரில் நிறுவப்போகும் தொழிலுக்காக பெரிய முதலீட்டை அவர் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நியூசிலாந்து மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேறிய டேவான் கான்வே மற்றும் பின் ஆலன் – காரணம் என்ன தெரியுமா?
இதன் காரணமாக எதிர்காலத்தில் அவர் அங்கேயே குடியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் தங்களுக்கு இந்தியாவில் சுதந்திரம் இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் குடியேறி வரும் வேளையில் தற்போது விராத் கோலியும் அந்த முடிவை கையில் எடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



