நியூசிலாந்து மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேறிய டேவான் கான்வே மற்றும் பின் ஆலன் – காரணம் என்ன தெரியுமா?

Conway-Allen
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் அந்நாட்டின் மத்திய சம்பளம் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேறியுள்ள வேளையில் தற்போது அடுத்ததாக டேவான் கான்வே மற்றும் பின் ஆலன் ஆகியோர் நியூசிலாந்து நாட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் தற்போது கிடைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் பின் அலன் ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு தொடர்களுமே விளையாடுவேன் என்று டேவான் கான்வே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் கூறுகையில் : மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஆனாலும் எனது குடும்பத்திற்கும் எனக்கும் இந்த நேரத்தில் இந்த முடிவு சரியான ஒன்று என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கான்வே தெரிவித்துள்ளார். அதேபோன்று மற்றொரு வீரரான பின் ஆலன் இதே முடிவை எடுத்துள்ளார். ஆனாலும் இது தொடர்பாக அவர் எந்த ஒரு தகவலையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

நியூசிலாந்து வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் ஒரு வீரர் இடம்பெறவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக அவர்கள் தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் விருப்பத்திற்கு எந்த ஒரு வெளிநாட்டிலும் சென்று லீக் போட்டிகளில் விளையாடலாம்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் தற்போது வரை கெத்து காட்டும் ரோஹித் சர்மா மற்றும் கோலி – விவரம் இதோ

உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதால் அதிக சம்பளம் கிடைப்பதனாலும், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லாமல் அவர்களையும் அழைத்துச் செல்லலாம் என்பதாலேயும் பெரும்பாலான நியூசிலாந்து வீரர்கள் இந்த முடிவை கையில் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement