புக்ல இல்லாத ஃபீல்டிங் வைப்பாரு, அவர மாதிரி கேப்டன நான் பாத்ததே இல்ல – வியந்து பாராட்டும் வெங்கடேஷ் ஐயர்

Venkatesh Iyer
- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலகக் கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்த மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார். அதே போல் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாடி வெற்றியில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கான இலக்கணத்தை ஏற்படுத்திய அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் என்று சொல்லலாம். மேலும் பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

Hardik-Pandya-and-Dhoni

- Advertisement -

அந்த வகையில் தோனி பல பரிணாமங்களை கொண்டிருந்தாலும் அழுத்தமான சமயங்களிலும் பதற்றமடையாமல் யாரும் நினைத்து பார்க்காத வித்தியாசமான முடிவுகளை எடுத்து வெற்றி காணும் அவருடைய கேப்டன்ஷிப் உலக புகழ்பெற்றதாகும். குறிப்பாக ரிக்கி பாண்டிங், சௌரவ் கங்குலி போன்றவர்களை காட்டிலும் விக்கெட் கீப்பராக இருக்கும் காரணத்தால் பேட்ஸ்மேன்கள் எப்படி சிந்திப்பார்கள் எந்த கோணத்தில் அடிப்பார்கள் என்பதை நன்கு தெரிந்துள்ள அவர் அதற்கேற்றார் போல் ஃபீல்டர்களை நிற்க வைத்து விக்கெட்டை எடுப்பதில் வல்லவர்.

வேற லெவல் தோனி:
அதற்கு எடுத்துக்காட்டாக 2010 ஐபிஎல் ஃபைனலில் அச்சுறுத்தலை கொடுத்த பொல்லார்ட்டை நேராக ஒரு ஃபீல்டரை நிற்க வைத்து அவுட்டாக்கிய அவருடைய கேப்டன்ஷிப் மறக்கவே முடியாதது. அந்த வகையில் பெரும்பாலும் புத்தகத்தில் இல்லாத ஃபீல்டிங்கை செட்டிங் செய்யும் தோனி ஓய்வு பெற்றதும் அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என அவரை வளர்த்த சௌரவ் கங்குலி பல வருடங்களுக்கு முன்பே பெருமையுடன் பாராட்டியதை மறக்க முடியாது. இந்நிலையில் பேட்ஸ்மேன்களின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்றார் போல் புத்தகத்தில் இல்லாத ஃபீல்டிங்கை செட்டிங் செய்து இந்த ஐபிஎல் தொடரில் தம்மை அவுட்டாக்கிய தோனியின் கேப்டன்ஷிப் பற்றி கொல்கத்தாவுக்கு விளையாடும் வெங்கடேஷ் ஐயர் வியந்து பாராட்டியுள்ளார்.

Rohit Sharma Dhoni

குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் தோனி தம்மை அவுட்டாக்கிய விதம் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய பின்வருமாறு. “நானும் இன்னொருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 2 ஃபீல்டர்கள் ஆஃப் சைட் திசையிலும் ஷார்ட் தேர்ட் மேன் மற்றும் கவர்ஸ் திசையில் தலா ஒருவரும் ஃபீல்டர்கள் இருந்தனர். அப்படி அனைத்தும் சரியாக இருந்த போது தோனி அவர்களில் ஒருவரை அழைத்து மற்றொரு பக்கம் நிற்க வைத்தார்”

- Advertisement -

“ஆச்சரியப்படும் வகையில் அடுத்த பந்திலேயே எதிர்ப்புறம் இருந்த பேட்ஸ்மேன் அவர் நிற்க வைத்தவரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த பேட்ஸ்மேனுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் “ஏன் 3 – 4 பந்துகளுக்கு பின் அவுட்டாகாமல் அடுத்த பந்திலேயே அவர் அவுட்டானார்” என்று நினைத்து நான் வியந்தேன். அப்போது தான் “ஓ அதை செய்தவர் தோனி” என்பதை உணர்ந்து அவர் என்ன ஒரு அற்புதமான மூளையை கொண்டிருக்கிறார் என்று வியந்தேன்”

venkatesh iyer 1

“இந்த வருடமும் நான் ஒரு போட்டியில் விளையாடிய போது ஷார்ட் தேர்ட் மேன் திசையில் அடித்து அவுட்டானேன். இருப்பினும் அந்த ஃபீல்டர் தவறான இடத்தில் நிற்பதை நான் பார்த்தேன். ஏனெனில் கிரிக்கெட்டின் ஃபீல்டிங் புத்தகப்படி அவர் அங்கே நிற்கக்கூடாது. அந்த நிலையில் போட்டி முடிந்ததும் நான் தோனியிடம் “ஏன் பைய்யா? அங்கே அவரை தவறாக வைத்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு என்னுடைய பேட்டிலிருந்து பந்து வெளிவந்த கோணத்தின் விதத்திற்கு ஃபீல்டர் தள்ளி தான் நிற்க வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க:IND vs WI : எல்லாரும் வெஸ்ட் இண்டீஸ் போயிட்டாங்க. ஆனா இன்னும் ரோஹித், கோலி மட்டும் போகலையாம் – ஏன் தெரியுமா?

“அப்போது தான் “வாவ்” அதை நாம் கூட நினைக்கவில்லையே என்று நினைத்தேன். பொதுவாக கிரிக்கெட் என்பது கோணங்களை பொறுத்ததாகும். அதை இங்கேயும் அங்கேயும் மாற்றி மாற்றி போட்டியை சரியாக படித்து கச்சிதமாக பின்பற்றுவதே தோனியின் மிகப்பெரிய பலமாகும். மேலும் அவர் களத்திற்கு வந்தாலே ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருக்கும். அதே சமயம் தம்மை லெஜெண்ட் என்று நினைத்து அவர் எப்போதும் இளம் வீரர்களை பிரித்துப் பார்ப்பதில்லை” என்று கூறினார்.

Advertisement