IND vs WI : எல்லாரும் வெஸ்ட் இண்டீஸ் போயிட்டாங்க. ஆனா இன்னும் ரோஹித், கோலி மட்டும் போகலையாம் – ஏன் தெரியுமா?

Rohit-and-Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்க இருக்கிறது. அதன்படி இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து விட்டது.

INDvsWI

- Advertisement -

இன்னும் டி20 தொடருக்கான அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருக்கும் வேளையில் டேஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு பயணித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் வீரர்களை ஒரே விமானத்தில் பயணிக்க வைக்க டிக்கெட் பதிவு செய்ய முடியாததால் பகுதி, பகுதியாக வீரர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் சென்றடையவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Rohit-and-Kohli

அதற்கு காரணம் யாதெனில் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்த கையோடு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் தற்போது வெளிநாட்டில் ஓய்வில் உள்ளதால் அவர்கள் இருவரும் பிசிசிஐ பதிவு செய்த டிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் பயணிக்கவில்லையாம்.

- Advertisement -

மாறாக அவர்கள் இருவரும் தனிப்பட்ட வகையில் பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு இன்னும் சில தினங்களில் சென்றடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட்கள் – இந்தியாவுக்கு எச்சரிக்கையுடன் மாபெரும் உலக சாதனை படைத்த ஷாஹீன் அப்ரிடி

அவர்கள் இருவரை தவிர்த்து அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றடைந்து விட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் ஜூலை 12-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement