
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சற்றுமுன் துவங்கிய நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர் அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் அந்த அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான வெங்கடேஷ் ஐயர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இந்த தொடரில் இதுவரை பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இருந்த மனிஷ் பாண்டே கொண்டுவரப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் 23 கோடியே 74 லட்சம் ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவருக்கு அந்த அணியின் நிர்வாகம் துணை கேப்டன் பதவியையும் வழங்கியிருந்தது.
ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எதிர்பார்த்த அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போதைய நிலையில் கொல்கத்தா அணி இதுவரை தங்கள் விளையாடிய 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகளை பெற்றிருக்கும் வேளையில் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் வெங்கடேஷ் ஐயர் அந்த அணியில் இடம் பெறாதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : தோனிக்கு மாற்று இவர்தான் கன்பார்ம் ஆயிடுச்சி.. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் – தோனி எடுத்த முடிவு
அந்த வகையில் சி.எஸ்.கே போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின் போது வெங்கடேஷ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அந்த காயம் குணமடைய சில நாட்கள் ஆகும் என்பதனால் அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே அணியில் இடம்பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.