தோனிக்கு மாற்று இவர்தான் கன்பார்ம் ஆயிடுச்சி.. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் – தோனி எடுத்த முடிவு

Dhoni and Urvil Patel
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 11 ஆட்டங்களில் 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கும் வேளையில் ஏற்கனவே இந்த நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகாரவப்பூர்வமாக இழந்துவிட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள மூன்று சம்பிரதாய ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான புதிய வீரர் :

அந்த வகையில் சென்னை அணி இன்று மே 7-ஆம் தேதி கொல்கத்தா நகரில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சென்னை அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் கடந்த போட்டியின் போது விளையாடிய ஷேக் ரஷீத் மற்றும் சாம் கரன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவான் கான்வே மற்றும் உர்வில் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக உர்வில் பட்டேலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கு பதிலாக இருந்த வன்ஷ் பேடி கடந்த சில நாட்களுக்கு காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் இந்த உர்வில் பட்டேல். 26 வயதான அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் சி.எஸ்.கே அணியில் இணைந்து சில நாட்கள் மட்டுமே ஆனதால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இணைந்த சில தினங்களிலேயே அவருக்கு இந்த வாய்ப்பை தோனி வழங்கியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் பட்டேல் சையத் முஷ்டாக் அலி போட்டியில் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் யார்? என்று கேள்வி இருந்து வரும் வேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் பட்டேலை அணிக்குள் இணைத்து வாய்ப்பு வழங்கியுள்ள தோனி அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எஞ்சியுள்ள போட்டிகளிலும் அவரை விளையாட வைப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஹார்டிக் செய்ஞ்ச தப்பு தான் மும்பை அணி தோத்ததுக்கு காரணம்.. தெரிஞ்சே தப்பு பண்ணிட்டாரு – கவாஸ்கர் விமர்சனம்

ஒருவேளை இந்த தொடரின் எஞ்சியுள்ள இந்த மூன்று போட்டிகளிலும் அவர் ஓரளவு சிறப்பாக விளையாடிவிட்டால் நிச்சயம் எதிர்காலத்தில் அவரே தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் சென்னை அணியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement