“நான் ரெடி தான் வரவா”.. தளபதி விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய இந்திய வீரர் – அசத்தல் நடனம்

Venkatesh Iyer
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடிக்கும் பாடல்களை ரீகிரியேட் செய்து நடனமாடி அதனை சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள தளபதி விஜய்யின் லியோ பட பாடலான “நான் ரெடி தான் வரவா” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோன்று சமூக வலைதளத்தில் நாள்தோறும் ஏராளமானோர் இந்த பாடலை ரீகிரியேட் செய்து அதேபோன்று நடனமாடி தங்களது திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய்யின் இந்த பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயரும் நடனமாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. தமிழ் நடிகர்களில் கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கி விட்டாலும் இன்றளவும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து மிகச் சிறப்பாக நடித்து வரும் விஜய்யின் நடனத்திற்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோன்று நமது இந்திய அணியிலும் சில ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் போன்றோர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக தங்களை காண்பித்து வருகின்றனர். மேலும் மத்திய பிரதேசத்தில் வசித்து வந்தாலும் பூர்வீகம் தமிழகம் என்பதனால் வெங்கடேஷ் இயர் சரளமாக தமிழில் பேசக் கூடியவர். அதுமட்டுமின்றி தமிழ் படங்களை விரும்பி பார்க்கக் கூடியவர்.

- Advertisement -

அண்மையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்ட அவர் தமிழ் திரைப்படங்களை ரசிப்பது மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் நான் ரெடியா பாடலுக்கு அவர் ஆடியுள்ள நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நியாயமா அஸ்வின், முரளிதரன், வால்ஷை தடை பண்ணிருக்கணும் – ஜாம்பவான்களை வம்பிழுக்கும் சயீத் அஜ்மல்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியிருந்த வெங்கடேஷ் ஐயர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement