வீடியோ : மும்பையை வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயர், 15 வருடம் 5477 நாட்களுக்கு பின் கொல்கத்தாவுக்காக வரலாற்று சாதனை

Venkatesh Iyer
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் டாப் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஆரம்பத்திலேயே தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்த களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியை து

அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் நிதிஷ் ராணாவும் 5 (10) ரன்களில் ஆட்டமிழந்ததால் 73/3 என கொல்கத்தா தடுமாறினாலும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர் மும்பை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு அரை சதமடித்து தொடர்ந்து ரன் ரேட்டை சரிய விடாமல் வைத்திருந்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சர்தூள் தாக்கூர் 13 (11) ரன்களில் அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ந்து பந்தாடிய வெங்கடேஷ் ஐயர் மும்பை பவுலர்களைப் பந்தாடி பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

15 வருட சாதனை:
தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் 16வது ஓவரிலேயே தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். குறிப்பாக கொல்கத்தா அணிக்காக 15 வருடங்கள் 5477 நாட்கள் கழித்து சதமடிக்கும் 2வது வீரர் என்ற சாதனையையும் வெங்கடேஷ் ஐயர் படைத்தார். கடைசியாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சரமாரியாக அடித்து நொறுக்கிய நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா அணிக்காக சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்து 158 ரன்கள் விளாசி அபார தொடக்கம் கொடுத்தது யாராலும் மறக்க முடியாது.

ஆனால் அதன் பின் கடந்த 15 வருடங்களில் 227 போட்டிகளில் விளையாடி 2 சாம்பியன் பட்டங்களையும் வென்ற கொல்கத்தா அணிக்காக விளையாடிய எந்த பேட்ஸ்மேன்களும் சதமடிக்காமல் இருந்து வந்தனர். அதை இந்த போட்டியில் நிறுத்தி மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் கொல்கத்தா வீரராகவும் சாதனை படைத்த வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரி 9 சிக்சருடன் 104 (51) ரன்களை 203.92 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் களமிறங்கிய ரிங்கு சிங் 2 பவுண்டரியுடன் 18 (18) ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (11) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 185/6 ரன்கள் எடுத்தது. மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா இல்லாமல் சுமாராக பந்து வீசிய மும்பை சார்பில் அதிகபட்சமாக ரித்திக் சாக்கீன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 186 என்ற இலக்கை மும்பை துரத்தி வருகிறது.

முன்னாதாக இந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி நல்ல ஸ்கோரை எடுக்க உதவியுள்ளார். குறிப்பாக 2021 சீசனில் அபாரமாக செயல்பட்டு கொல்கத்தா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கடந்த வருடம் சுமாராக செயல்பட்ட காரணததால் இந்திய அணியிலும் ஹர்டிக் பாண்டியா வந்ததால் கழற்றி விடப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : குஜராத்தில் கம்பேக் கொடுத்தாலும் என்னோட வளர்ச்சிக்கு அவர் தான் காரணம் – முன்னாள் கேப்டனுக்கு மோஹித் சர்மா நன்றி

இருப்பினும் இந்த வருடம் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட துவங்கிய அவர் இந்த போட்டியில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி சதமடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தியுள்ளது கொல்கத்தா ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement