IPL 2023 : குஜராத்தில் கம்பேக் கொடுத்தாலும் என்னோட வளர்ச்சிக்கு அவர் தான் காரணம் – முன்னாள் கேப்டனுக்கு மோஹித் சர்மா நன்றி

Mohit Sharma
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் விறுவிறுப்பான துவக்கத்தை எட்டியுள்ள நிலையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் இது வரை களமிறங்கிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் ஜொலித்து வருகிறது. அந்த அணியில் கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரிங்கு சிங்கிடம் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை வாரி வழங்கிய யாஷ் தயாளுக்கு பதிலாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விளையாடிய மோஹித் சர்மா 4 ஓவரில் வெறும் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Mohit Sharma GT vs PBKS

- Advertisement -

ஹரியானாவை சேர்ந்த இவர் கடந்த 2011 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாங்கப்பட்டார். அதில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2014 சீசனில் 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்று சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் சர்வதேச அளவிலும் இந்தியாவுக்காக விளையாடு வாய்ப்பு கொடுத்த தோனியின் தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் முக்கிய வீரராக மோஹித் சர்மா செயல்பட்டார்.

தோனிக்கு நன்றி:
ஆனால் அந்த உலக கோப்பைக்கு பின் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத அவர் ஐபிஎல் தொடரிலும் 2016 – 2018 வரையிலான காலகட்டத்தில் பஞ்சாப் அணிக்காக சுமாராகவே விளையாடினார். அதை தொடர்ந்து 2019இல் மீண்டும் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டு 1 போட்டியில் விளையாடிய அவர் பழைய பன்னீர்செல்வமாக அசத்த தவறியதால் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 2020, 2021 சீசனில் எந்த அணியாலும் வாங்கப்படாத அவர் 2022 சீசனில் குஜராத் அணியில் நெட் பவுலராக செயல்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் சோகமாகவும் அமைந்தது.

Mohith-2

அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் மனம் தளராமல் போராடி இந்த வருடம் களமிறங்கிய முதல் போட்டியிலேயே மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த நிலையில் வீட்டில் அமர்ந்திருந்த தன்னை குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா மீண்டும் விளையாடுவதற்கு உதவியதாக தெரிவித்த மோகித் சர்மா தன்னுடைய கேரியரின் சிறந்த செயல்பாடுகள் தோனியின் தலைமையில் தான் வெளிவந்ததாக நன்றி மறவாமல் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய ஐபிஎல் மற்றும் இந்திய கேரியரின் பெரும்பாலான பகுதிகள் மஹி பாய் தலைமையில் தான் இருந்தது. குறிப்பாக என்னுடைய சிறந்த செயல்பாடுகள் அவருடைய தலைமையில் தான் வெளிப்பட்டது. எனவே அதற்கான பாராட்டுக்கள் அவரையே சேரும். ஏனெனில் அவர் தான் என்னுள் இருந்த சிறந்த திறமைகளை வெளிப்படுத்த உதவினார். மேலும் அவரது தலைமையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். குறிப்பாக 2013 – 2016 வரை அவருடைய தலைமையில் விளையாடியது என்னுடைய கேரியரின் பொன்னான நாட்களாகும். ஆனால் சிறந்த சூழ்நிலைகளை பொறுத்த வரை இந்த ஐபிஎல் தொடரில் நான் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன்” என்று கூறினார்.

Mohit

அத்துடன் 5 சிக்ஸர்களை வாரி வழங்கியதால் அதிரடியாக நீக்கப்பட்ட யாஷ் தயாள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “குஜராத் அணியில் யாரும் யாருக்கு மாற்றாக விளையாடவில்லை. யாஷ் அந்தப் போட்டியில் விளையாடியிருப்பார். இருப்பினும் அவருக்கு சற்று காய்ச்சலாக இருந்ததால் தான் விளையாடவில்லை”

இதையும் படிங்க:வீடியோ : அவ்ளோ தெனாவட்டா? வார்னருக்கு மறுப்பு தெரிவித்த பிரிதிவி ஷா – அடுத்த பந்தில் நேர்ந்த பரிதாபம், விளாசிய டௌல்

“அத்துடன் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் அவரது இடத்தில் விளையாண்ட வேண்டிய நிலைமை வந்தது. மேலும் போட்டி முடிந்த பின் அவரிடம் நான் நீண்ட நேரம் பேசினேன். அந்த வகையில் தற்போதைய குஜராத் அணியில் நல்ல சூழ்நிலைகள் நிலவுவதற்கான பாராட்டுக்கள் அணி நிர்வாகத்தை சேரும்” என்று கூறினார்.

Advertisement