ஆமா விராட் கோலி ஃசெல்பிஷ் தான்.. அவங்களுக்காக இத்தனையும் செஞ்ச சுயநலவாதி.. வெங்கடேஷ் பிரசாத் கருத்து

Venkatesh Prasad
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்வதற்கு முழு மூச்சை வெளிப்படுத்தி போராடி வருகிறது.

இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம். கடந்த 2008இல் அறிமுகமானது முதலே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு ஏற்கனவே அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் போன்ற உலக சாதனைகளை படைத்துள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த போது ஏராளமானவர்கள் விதவிதமாக விமர்சித்தார்கள்.

- Advertisement -

மக்களின் செல்பிஷ்:
இருப்பினும் அந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது உச்சகட்ட ஃபார்மில் அசத்தி வரும் அவர் இந்த உலகக் கோப்பையில் 543 ரன்கள் குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். ஆனால் இப்படி நாட்டுக்காக நன்றாக செயல்பட்டும் தற்போது சுயநலவாதி என்ற விமர்சனத்திற்கு விராட் கோலி உள்ளாகி வருகிறார். ஆம் பொதுவாகவே பேட்ஸ்மேன்கள் 80 ரன்களை கடந்து விட்டால் சற்று மெதுவாக விளையாடி சதத்தை தொடுவது வழக்கமாகும்.

அதை பின்பற்றி வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்த அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியிலும் 101* ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்தார். அதற்காக விராட் கோலி மிகவும் சுயநலமாக விளையாடுகிறார் என்று தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் ட்ரெண்டிங் செய்து விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். இந்நிலையில் 100 கோடி இந்திய மக்களின் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்குவதற்காக போராடும் விராட் கோலி சுயநலமாகவே விளையாடுவதாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இந்த மொத்த விமர்சனங்களுக்கும் அதிரடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: எங்க போய்ட போறாங்க.. இந்தியாவுக்கு பதிலடி காத்திருக்கு.. தெ.ஆ கோச் சவாலான பேட்டி

இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக பேசப்படும் விவாதங்களை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆம் விராட் கோலி சுயநலவாதியே. ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது. இவ்வளவு சாதித்த பின்பும் புதிய அளவுகோலை உருவாக்க வேண்டும் என்ற சுயநலம் இருக்கிறது. தனது கிரிக்கெட் அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் சுயநலமாக இருக்கிறார். ஆம் விராட் கோலி சுயநலவாதி” என்று கூறியுள்ளார்.

Advertisement