எங்க போய்ட போறாங்க.. இந்தியாவுக்கு பதிலடி காத்திருக்கு.. தெ.ஆ கோச் சவாலான பேட்டி

Rob Walter
Advertisement

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தோற்காமல் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியுள்ள இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று எதிரணிகளை பந்தாடி வருகிறது.

குறிப்பாக வெற்றிகரமான ஆஸ்திரேலியா, பரம எதிரி, பாகிஸ்தான், வலுவான நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா சவால் கொடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் நெதர்லாந்திடம் தோற்றதை தவிர்த்து பெரும்பாலும் 300 – 400 ரன்களை அடித்து நொறுக்கி எதிரணிகளை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்து செமி ஃபைனலுக்கும் தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

பதிலடி கொடுப்போம்:
ஆனால் அப்படிப்பட்ட வலுவான தென்னாப்பிரிக்காவையும் கொல்கத்தாவில் எதிர்கொண்ட இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குறிப்பாக விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 327 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் எடுத்த உதவியால் தென்னாபிரிக்காவை வெறும் 83 ரன்களுக்கு சுருட்டி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இதே உலகக்கோப்பையில் செமி ஃபைனல் அல்லது ஃபைனலில் இந்தியாவை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் ராப் வால்டர் அப்போது இந்த தோல்விக்கான பதிலடியை கொடுப்போம் என்று அறிமுகமான எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா மிகவும் சமநிலையுடன் திறமை நிறைந்த வலுவான அணியாக இருக்கிறார்கள்”

- Advertisement -

“இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வென்று வரும் அவர்கள் இதையும் வென்றுள்ளார்கள். ஆனால் உங்களுடைய நாளில் உங்கள் மீது நம்பிக்கை வைத்து திறமையை வெற்றிகரமாக செயல்படுத்தினால் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே அதை மார்கோ யான்சென் செய்து நாங்கள் பார்த்துள்ளோம். இப்போட்டி அவருக்கு சரி வர அமையவில்லை”

இதையும் படிங்க: ரோஹித், கோலி எல்லாம் இல்ல.. இந்த வேர்ல்டுகப்ல இதுவரைக்கும் நல்லா ஆடுன 3 பேர் இவங்கதான் – பாண்டிங் கணிப்பு

“ஆனால் அவர் ஏற்கனவே 7 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். பொதுவாக இந்த விளையாட்டில் ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய பாடங்களையும் ஆச்சரியங்களையும் கற்பீர்கள். எனவே அடுத்த முறை இந்தியாவை சந்திக்கும் போது வெற்றிக்கான மேஜை மாறலாம். சொல்லப்போனால் இதே தொடரில் எங்களுக்கு அவர்களை எதிர்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு இருக்கிறது என்பதே உலகக் கோப்பையின் அழகாகும். அதில் நாங்கள் இப்போட்டியில் கற்றதை வைத்து பதிலடியை கொடுப்போம்” என்று கூறினார்.

Advertisement