ரோஹித், கோலி எல்லாம் இல்ல.. இந்த வேர்ல்டுகப்ல இதுவரைக்கும் நல்லா ஆடுன 3 பேர் இவங்கதான் – பாண்டிங் கணிப்பு

Ponting
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வர இருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்துவிட்டன.

அதனை தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கப்போகும் அணிகளுக்கான மோதல் தற்போது பலமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் உள்ளனர்.

- Advertisement -

இன்னும் ஒரு சில தினங்களில் எந்த இரு அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் என்பது உறுதியாகிவிடும். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் விருப்பம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ள மூன்று வீரர்களை பட்டியலிட்டுள்ளார்/ அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை தொடரில் வர்ணனையாக செயல்பட்டு வரும் அவர் தேர்வு செய்த மூன்று வீரர்களாவது :

- Advertisement -

1) ஆடம் ஜாம்பா : இதுவரை இந்த தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். 2) குவிண்டன் டி காக் : இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இதுவே தனது கடைசி தொடர் என ஓய்வு முடிவை அறிவித்த குவிண்டன் டி காக் இதுவரை விளையாடி உள்ள போட்டிகளில் 77 ரன்கள் சராசரியுடன் 545 ரன்கள் குவித்துள்ளதோடு இந்த தொடரில் நான்கு சதங்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவர் மட்டும் தான் டீமுக்காக ஆடுறாரு.. ஆனா விராட் கோலி பக்கா ஃசெல்பிஷ்.. ஹபீஸ் தடாலடி விமர்சனம்

3) மார்கோ யான்சென் : தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் இவர் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். அதோடு பேட்டிங்கிலும் பின்வரிசையில் கை கொடுக்கும் இவர் இந்த தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றார் ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வரும் வேளையில் அவர்களில் ஒருவரை கூட தேர்வு செய்யாமல் இந்த தொடரின் 3 சிறந்த வீரர்களாக வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்த பாண்டிங்கின் இந்த கணிப்பு பலரது மத்தியிலும் விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement