ரசிகர்களின் கண்துடைச்சு ஏமாத்துற வேலைய எப்போ தான் நிறுத்துவீங்க – பிசிசிஐயை மீண்டும் விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad 5
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்பதை மைதானத்திற்கு சென்று நேரில் பார்ப்பதற்காக டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பணத்தை தயாராக கையில் வைத்திருந்தாலும் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏனெனில் டிஜிட்டல் இந்தியா என்ற பெருமை பேசும் அரசியல் வாரிசாக ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தும் இத்தொடருக்கான டிக்கெட் கவுன்டர்களில் தான் வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

அதற்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியதால் ஐசிசி அறிவுறுத்தலின் படி புக்மைஷோ எனும் இணையத்தில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம் என்று பின்னர் பிசிசிஐ அறிவித்தது. அதை தொடர்ந்து டிக்கெட் விலை வாங்குவதற்காக விண்ணப்பித்த பின் மொபைல் அல்லது கணினியில் முன்னோக்கி பின்னோக்கி செல்லாமல் 2 முதல் 12 மணி நேரங்கள் வரை காத்திருக்குமாறு காண்பிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

கண்துடைப்பு செயல்:
அப்படி காத்திருந்தாலும் கடைசியில் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பது மற்றொரு வேதனையாகும். அதை விட இந்தியா – நெதர்லாந்து போன்ற கடைசியில் நடைபெறும் போட்டிகளின் டிக்கெட்கள் விற்பனை துவங்குவதற்கு முன்பே வெற்றி தீர்ந்து விட்டதாக செயற்கையாக புரோகிராம் செய்யப்பட்டு காண்பிக்கப்படுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். அதைப் பார்த்த முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ரசிகர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் முதன்மை பங்குதாரர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக ப்ளாக்கில் விற்பதற்கும் பணக்காரர்களுக்கும் முன்னுரிமை கொடுக்காமல் ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும் அவர் விமர்சித்திருந்தார். அந்த நிலையில் உலகக்கோப்பை டிக்கெட் விற்பனையில் அடுத்தக்கட்டமாக 4 லட்சம் டிக்கெட்டுகள் செப்டம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு வரும் என்று பிசிசிஐ அறிவித்தது. அத்துடன் இந்தியா போட்டிகளுக்கு ஒருவர் அதிகபட்சமாக 2 டிக்கெட்டுகளும் மற்ற போட்டிகளுக்கு 4 டிக்கெட்டுகளும் வாங்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்தது.

- Advertisement -

அது போக முன்பு போல் நேரம் வீணடிக்கப்படாமல் உடனடியாக ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி உங்களுக்கு விருப்பமான எளிதில் வாங்கலாம் என்றும் பிசிசிஐ அறிவித்தது. அதற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் நேற்று இரவு முதலே போல ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. அதனால் ஏமாற்றமடைந்த வெங்கடேஷ் பிரசாத் ரசிகர்களின் கண்துடைப்பு வேலைகளை நிறுத்திவிட்டு சரியான முறையில் டிக்கெட்டுகளை வழங்குமாறு மீண்டும் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: உங்களால் ஒரே நாளில் சந்தர்பாலாக மாற முடியாது தம்பிகளா – ஷாஹீன் அப்ரிடியை சமாளிக்க அட்வைஸ் கொடுத்த முன்னாள் பாக் வீரர்

“இது பார்ப்பதற்கு சரியாக இல்லை. இன்று டிக்கெட்டை விற்கும் பார்ட்னர்கள் அதற்காக வரும் ஆன்லைன் ட்ராபிக்கை கையாள்வதற்கு தடுமாறுகிறார்கள். அல்லது டிக்கெட்டுகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் இது மற்றொரு கண்துடைப்பு. டிக்கெட்டுகள் எப்படி விற்கப்படுகின்றன யாருக்கு எந்த ஃபிளாட்பார்ம் என்பதற்கான சரியான தணிக்கை மற்றும் அடையாளம் காண்பிக்கப்படும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement