உங்களால் ஒரே நாளில் சந்தர்பாலாக மாற முடியாது தம்பிகளா – ஷாஹீன் அப்ரிடியை சமாளிக்க அட்வைஸ் கொடுத்த முன்னாள் பாக் வீரர்

Aaqib Javed
Advertisement

இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக இதே தொடரில் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் சாகின் அப்ரிடிக்கு எதிராக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால் 66/4 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 266 ரன்கள் குவிக்க வைத்து ஓரளவு மானத்தை காப்பாற்றிய போது வந்த மழை போட்டியை ரத்து செய்ய வைத்தது.

பொதுவாகவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வலது கை பேட்ஸ்மேன்கள் தருமாறுவார்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் இயற்கையான ஒன்றாகும். அந்த வகையில் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் முகமத் அமீர், 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ட்ரெண்ட் போல்ட், 2021 உலக கோப்பையின் முக்கியமான லீக் போட்டியில் சாகின் அப்ரிடி ஆகிய இடது கை பவுலர்கள் ரோஹித், ராகுல், விராட் கோலி போன்ற இந்திய வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுத்து வரலாற்று தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

சந்தர்பால் ஆக முடியாது:
ஆனால் அதிலிருந்து இதுவரை எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணாமல் இத்தனை வருடங்கள் கழித்தும் தொடர்ந்து அதே போல் விராட், ரோகித் போன்ற அனுபவமிக்க வீரர்கள் சொதப்புவது தான் இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா தம்முடைய பேட்டிங் ஸ்டேன்ஸில் மாற்றங்களை செய்தும் ஷாஹீன் அப்ரிடியிடம் தடுமாறுவதில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.

இந்நிலையில் பேட்டிங் ஸ்டேன்ஸை மாற்றி ஒரே நாளில் சிவ்நரேன் சந்தர்பால் போன்ற மாற்றத்தை சந்தித்து உங்களால் சாகின் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் ஆகிப் விக்கெட்டை காப்பாற்றுவதற்காக விளையாடாமல் இயற்கையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் அவர்கள் யார் பந்து வீசுகிறார் என்பதை மறக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் ஹாஃல்ப் வாலி பந்துகளை தவற விடுகிறார்கள். அதை விட அவர்கள் அட்டாக் செய்யும் எண்ணத்துடன் விளையாடாமல் ரன்கள் அடிப்பதற்கும் முயற்சிப்பதில்லை. எனவே அவர்கள் தங்களுடைய விக்கெட்டை காப்பாற்றுவதற்காக நினைக்காமல் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் 2023-ல நான் ஒரு ஓவர் கூட பவுலிங் பண்றேனு கேக்கவே இல்ல. ஏன் தெரியுமா? – ஷிவம் துபே விளக்கம்

“அத்துடன் இதற்காக உங்களுடைய டெக்னிக்கை மாற்றுவது ஒரு மோசமான முடிவாகும். குறிப்பாக விராட் கோலியாக இருக்கும் நீங்கள் விராட் கோலியாகவே விளையாடுங்கள். ஏனெனில் உங்களால் திடீரென்று சந்தர்பால் போல் வர முடியாது” என்று கூறினார். முன்னதாக சாகின் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொள்வதற்கு விக்கெட்டை காப்பாற்றாமல் அட்டாக் செய்து விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement