ஐ.பி.எல் 2023-ல நான் ஒரு ஓவர் கூட பவுலிங் பண்றேனு கேக்கவே இல்ல. ஏன் தெரியுமா? – ஷிவம் துபே விளக்கம்

Shivam-Dube
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை சாதனையை சமன் செய்தது. தோனி தலைமையிலான சிஎஸ்கே பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் 2023-ஆம் ஆண்டு தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய ஷிவம் துபே பல போட்டிகளில் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். குறிப்பாக பிரமாண்டமான சிக்ஸர்களை விளாசி அசத்திய அவர் சிக்ஸர் துபே என்ற பட்டத்தினையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த தொடரில் 14 போட்டியில் விளையாடிய அவர் 158 ரன்கள் என்கிற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 418 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது பேட்டிங் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்த வேளையில் அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஆல்ரவுண்டரான அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் முழுவதும் பந்து வீசாததற்கு என்ன காரணம்? என்பது குறித்து தற்போது விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : சி.எஸ்.கே அணியில் ஆறாவது பவுலிங் ஆப்ஷனாக மொயின் அலி இருந்தார். எனவே நான் ஏழாவது ஆப்ஷனாக மட்டுமே இருந்தேன். அதனால் போட்டிக்கு தேவைப்படும் போது எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். அதேபோன்று இம்பேக்ட் ரூல் இருந்ததால் என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது. மேலும் பல போட்டிகளில் நான் ஓய்வெடுக்கவும் வசதியாக இருந்தது.

- Advertisement -

இருந்தாலும் என் மனதில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்துவீச வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் நான் ஒருபோதும் தோனியிடம் சென்று பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. ஏனெனில் ஒருவேளை நான் தோனியிடம் சென்று பந்துவீச வாய்ப்பு கேட்டு இருந்தால் அது அவரை நான் அவமானப்படுத்துவது போல் ஆகி இருக்கும். ஏனெனில் தோனிக்கு எப்போது யாரை பந்துவீச வைக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஒருவேளை அவர் நினைத்திருந்தால் நிச்சயம் எனக்கு பந்துவீச வாய்ப்பளித்து இருப்பார்.

இதையும் படிங்க : டீம்ல ஆளே இல்லனு தெரிஞ்சும் அந்த பையனை ஏன் எடுக்கல? இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு – பரத் அருண் கேள்வி

ஆனால் அவர் என்னுடைய பேட்டிங்கில் நான் எந்த ஒரு டென்ஷனும் இன்றி விளையாட வேண்டும் என்பதற்காகவே என்னை சுதந்திரமாக விளையாட வைத்தார். இருந்தாலும் நான் தொடர்ச்சியாக பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். முன்பை விட தற்போது என்னுடைய பந்துவீச்சு திறன் அதிகரித்துள்ளதாக கருதுகிறேன். கட்டாயம் எதிர்வரும் காலத்தில் சென்னை அணிக்காக பந்துவீச வாய்ப்பு கிடைத்தாலும் அதனை செய்ய தயாராக உள்ளதாக ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement