டீம்ல ஆளே இல்லனு தெரிஞ்சும் அந்த பையனை ஏன் எடுக்கல? இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு – பரத் அருண் கேள்வி

Bharat-Arun
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோரின் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணியின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்த இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர், மற்றும் தவற விடப்பட்ட வீரர்கள் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் அர்ஷ்தீப் சிங்கை ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை என தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் அறிமுகமானபோது அவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய வீரராக மாற்ற வேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால் ஒரே ஆண்டிலேயே கழட்டி விடப்பட்டது வருத்தமளிக்கிறது.

அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனாலும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை அதோடு அவர் உலக கோப்பையிலும் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக பரத் அருண் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியிடம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதனாலே அர்ஷ்தீப் சிங்கை நாங்கள் அணிக்குள் கொண்டு வந்து அவரை பெரிய வீரராக மாற்ற முயற்சித்தோம். அந்த வகையில் அவரும் மிகச் சிறப்பாகவே பந்து வீசினார். ஸ்விங் பந்து, யார்க்கர் பந்து என அசத்தலாக செயல்பட்டார். பவர்பிளே ஓவர்களிலும் அற்புதமாக பந்து வீசினார்.

இதையும் படிங்க : மத்தவங்கள விட எனக்கு தான் இரண்டு மடங்கு, மூனு மடங்கு வேலை அதிகம் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

ஆனால் இவ்வேளையில் அவருக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கொடுத்து ஊக்குப்படுத்துவதை தவிர்த்து அவரை அணியிலிருந்து வெளியேற்றியது ஏன்? என்று புரியவில்லை, இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்று தெரிந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக பரத் அருண் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement