தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் இவரை சேருங்க. வேறலெவலில் பேட்டிங் பண்ணுவாரு – வெங்சர்க்கார் பேட்டி

Dilip
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் 26-ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விராட் கோலியின் தலைமையில் 18 வீரர்கள் இந்த தொடருக்காக தேர்வாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கான அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் ஒருநாள் தொடருக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

Dekock

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான தேர்வில் சில புதிய வீரர்களையும் இணைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான திலிப் வெங்சர்க்கார் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை ஒருநாள் தொடருக்கான அணியில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில் : தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் பார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்யலாம். நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே டிராபியில் மூன்று சதங்களை அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். இதன் காரணமாக நிச்சயம் அவரை நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்தால் அங்கும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

gaikwad

மேலும் அவர் ஒன்றும் 18, 19 வயது வீரர் கிடையாது. அவருக்கு தற்போது 24 வயதாகிறது. அவர் நல்ல முதிர்ச்சியான வீரராகவே இருக்கிறார் என்றும் தனது ஆதரவை வழங்கியுள்ளார். துவக்க வீரராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் அதிக ஆதரவுகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டிராவிட் உடன் பணியாற்றுவது எப்படி இருக்கு ? புதிய கேப்டன் ரோஹித் சர்மா – அளித்த பதில்

சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான இவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியிலும் மூன்று சதங்களை அடுத்தடுத்து விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement