டிராவிட் உடன் பணியாற்றுவது எப்படி இருக்கு ? புதிய கேப்டன் ரோஹித் சர்மா – அளித்த பதில்

dravid
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் கோலியின் தலைமையிலான டெஸ்ட் தொடர் ஆகியவற்றை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா டிராவிட் உடன் பணியாற்றியது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

dravid 1

- Advertisement -

மூன்று போட்டிகள் மட்டுமே இதுவரை பணியாற்றிய நிலையில் அவரது இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ரோஹித் கூறியதாவது : டிராவிட் சார் உடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி. 3 ஆட்டங்கள் மட்டுமே தற்போது நாங்கள் இணைந்து பணியாற்றி இருந்தாலும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

அவர் விளையாடிய காலத்தில் எவ்வாறு ஆடியிருப்பார் என்பதை தற்போது எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே வேளையில் இந்திய அணியை ஓய்வறையில் மிகவும் ரிலாக்சாக வைத்துள்ளார். எப்போதும் அணியின் ஓய்வறையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதனால் மனநிலை தெளிவாக இருக்கிறது. அப்படி வீரர்களின் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அது மைதானத்தில் நல்ல திறமையான ஆட்டமாக வெளிப்படுகிறது என்றும் ரோஹித் கூறியுள்ளார்.

dravid 2

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த பல ஆண்டுகளாகவே நான் என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும், பேட்டிங் குறித்தும் டிராவிடிடம் அதிகம் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். ஆனால் இப்போது அவர் எங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மேலும் எங்களுக்கு சவுகரியத்தை தந்துள்ளது. அவரது அனுபவங்கள் இப்போது எங்களிடம் பகிர்ந்து வருகிறார். அவர் கொடுக்கும் ஆலோசனைகள் எங்களை அழுத்தத்திலிருந்து வெளியில் கொண்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி ? என்ன ஆனது அவருக்கு – ஷாக்கிங் ரிப்போர்ட்

அவரது தலைமையின் கீழ் நாங்கள் நிச்சயம் ஐசிசி கோப்பைகளை கைப்பற்றுவோம். அடுத்ததாக வரும் டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை நோக்கி நாங்கள் தற்போது தயாராகி வருகிறோம் என்றும் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement