தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி ? என்ன ஆனது அவருக்கு – ஷாக்கிங் ரிப்போர்ட்

Kohli
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. வரும் 26ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் மூன்று நாட்கள் குவாரண்டடைன் இருந்த பிறகு 16ஆம் தேதி புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்போது இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

IND

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து விராட் கோலி விலக இருக்கிறாரோ? என்ற என்பது போன்ற ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே அவர் பதவி வகித்து வந்த ஒருநாள் கேப்டன் பொறுப்பினை பிசிசிஐ அதிரடியாக பறித்து ரோஹித் சர்மாவிடம் கொடுத்தது. இதன் காரணமாக கோலி அணி நிர்வாகத்தின் மீது கோபமாக இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

ஏற்கனவே மும்பை குவாரண்டைனில் ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இணைந்துள்ள வேளையில் விராட் கோலி இதுவரை பயோ பபுளில் இணையவில்லை. அதுமட்டுமின்றி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டாலும் “போன் சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

kohli 4

அதுமட்டுமின்றி மற்றபடி எந்த ஒரு அழைப்புக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கோலி இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து விலகு நினைக்கிறாரா உறுதியான தகவல் கிடைக்காமல் பிசிசிஐ அதிகாரிகள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : இனி இந்திய அணியில் இவர் விளையாட வாய்ப்பில்லை. அவரோட கரியர் ஓவர் – கம்பீர் ஓபன்டாக்

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் அவர் பங்கேற்பாரா? என்பது புரியாத புதிராக இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதால் இது ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்ஸாக மாறியுள்ளது. இருப்பினும் அவர் அவரின் வருகை தாமதம் ஆகியிருந்தாலும் நிச்சயம் பயோ பபுளில் அவர் இணைவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement