இனி இந்திய அணியில் இவர் விளையாட வாய்ப்பில்லை. அவரோட கரியர் ஓவர் – கம்பீர் ஓபன்டாக்

gambhir
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது இன்னும் இரு தினங்களில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு புறப்பட தயாராக உள்ளது. வரும் 26ஆம் தேதி துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான அணியை ஏற்கனவே பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் துணை கேப்டன் ரஹானேவின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் புதிய துணைக்கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

IND

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹானேவை நீக்குவதற்கான முதல் நடவடிக்கையாகவே இந்த பதவி நீக்கம் நடைபெற்றுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 20 டெஸ்ட் இன்னிங்ஸில் இரண்டே இரண்டு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக இனி வரும் தொடர்களில் அவரது இடம் சந்தேகம்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் முடியும் கட்டத்தில் உள்ளதாகவும் அவர் இனி விளையாட வாய்ப்பு இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : துணை கேப்டன் என்ற காரணத்தினால் மட்டுமே ரஹானே அணியில் நீடிக்கிறார். அவருடைய ஆட்டம் தற்போது மிகவும் மோசமாக உள்ளதால் அவரது இடத்தினை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது.

Rahane

அதோடு ஷ்ரேயாஸ் ஐயரின் வருகையும் இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து உள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அவர் தொடர்ந்து ரன் குவிக்காத பட்சத்தில் அவர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. ரஹானே துணை கேப்டன் பொறுப்பில் இருந்ததால் மட்டுமே அணியில் நீடித்து வந்தார் என்றும் தற்போது ரோஹித்துக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதே ரஹானேவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் என கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவருடன் நான் விளையாடிய இந்த 5 வருடத்தையும் மிகவும் ரசித்துள்ளேன் – புதிய கேப்டன் ரோஹித் சர்மா

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இனிவரும் போட்டிகளில் ரஹானே விளையாடுவது கஷ்டம் தான் அதே போன்று ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி ஆகியோர் அணியில் விளையாட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement