
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது ஜனவரி 31-ம் தேதி இன்று புனே நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்வேளையில் இன்றைய நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்கிற நிலையுடன் களமிறங்க காத்திருக்கிறது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்றாலும் பேட்டிங்கில் சிறிய தடுமாற்றம் தென்பட்டது.
இருந்தாலும் பேட்ஸ்மேன்களை தாண்டி பந்துவீச்சாளராக தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். கடந்த போட்டியின் போது 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த தொடரில் ஒட்டுமொத்தமாகவே மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய நான்காவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் இருதரப்பு டி20 தொடரின் ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக ஏற்கனவே வருண் சக்ரவர்த்தி தான் முன்னிலையில் உள்ளார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 தொடரின் போது ஒரே தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதுவே இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஒரே தொடரில் எடுத்த அதிக விக்கெட்டுகளாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க : இதைசெய்தால் மட்டும் போதும் சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு வந்துடுவாரு – துணைப்பயிற்சியாளர் பேட்டி
இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு அதிரான இந்த டி20 தொடரின் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஒரே டி20 தொடரில் அதிகம் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற தன்னுடைய சாதனையை தானே தகர்க்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.