இதைசெய்தால் மட்டும் போதும் சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு வந்துடுவாரு – துணைப்பயிற்சியாளர் பேட்டி

Ryan
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது இன்று புனே நகரில் நடைபெற இருக்கிறது.

சூரியகுமார் யாதவ் குறித்து கவலை இல்லை :

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி முழுமையாக பேட்ஸ்மேனாக விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 15 டி20 இன்னிங்ஸ்களில் சூர்யகுமார் யாதவ் இரண்டு முறை தான் அரைசதம் அடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் ஒரு முறை கூட 15 ரன்களை தொடவில்லை இதன் காரணமாக அவரது பேட்டிங் பார்ம் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் ஃபார்ம் அவுட் ஆகவில்லை என்றும் அவர் ஏற்கனவே தனது திறமையை பலமுறை நிரூபித்திருக்கிறார் என்றும் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரயான் டென் டெஸ்கோத்தே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட் பொறுத்த வரை ஒரே மாதிரி பெரிய ரன்களை எடுப்பது கடினமானன விடயம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக தற்போது உள்ள இந்திய அணியின் வீரர்களை அதிரடியாக விளையாடுங்கள், வேகமாக ரன் குவியுங்கள் என்று நாங்கள் கூறி வருகிறோம். அதன் காரணமாக அதிரடியாக விளையாடும் போது சில நேரங்களில் இப்படி தொடர்ந்து ஆட்டமிழக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது சூரியகுமார் யாதவ் தடுமாறி வருகிறார்.

இதையும் படிங்க : 4 ஆவது டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

ஆனாலும் அவரை போன்ற ஒரு வீரர் மீண்டும் பார்மை மீட்டெடுக்க அதிக போட்டிகள் தேவைப்படாது. சூரியகுமார் யாதவ் டி20 போட்டியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவருடைய பார்ம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இரண்டு அதிரடி ஷாட்களை ஆடினால் அவர் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி மீண்டும் பார்முக்கு வந்து விடுவார் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement