
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தியது.
இந்த வெற்றியின் காரணமாக இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்துள்ள வேளையில் நேற்றைய போட்டியின் போது தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவர் அடுத்த இந்த இரண்டு விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 50 விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்து அசத்தினார். அதோடு மட்டுமின்றி மேலும் ஒரு புதிய மைல் கல்லையும் குல்தீப் யாதவுக்கு அடுத்து இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக டி20 போட்டிகளில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தினார்.
அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரராக இந்திய அளவில் குல்தீப் யாதவ் 638 பந்துகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் வருண் சக்கரவர்த்தி 672 பந்துகளை வீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் முன்னாள் இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ் 600 பந்துகளில் 50 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கும் வேளையில் சர்வதேச அளவில் நான்காவது வீரராக வருண் சக்கரவர்த்தி இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தைரியமின்றி 4இல் ஒளிஞ்சுகிட்ட சூரியகுமார்.. ஃபார்முக்கு வரும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரு.. கைப் அதிருப்தி
இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி 32 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டி20 போட்டியானது டிசம்பர் 17-ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது.