- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இஷான் கிஷன் வேணாம்.. திலக் வர்மாவின் இடத்தில் இவரை விளையாட வையுங்க – வருண் ஆரோன் கருத்து

இந்திய அணியின் நட்சத்திர இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மா 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடி வந்த திலக் வர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியின் முக்கிய வீரராகவும் பார்க்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதே சந்தேகமாகியுள்ளது.

திலக் வர்மாவுக்கு பதிலா இவர்தான் ஆடனும் : வருண் ஆரோன்

ஏனெனில் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய அவருக்கு அடி வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளை தவறவிட்ட அவர் கடைசி 2 போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் எஞ்சியுள்ள போட்டியில் பங்கேற்பாரா என்பது இன்னும் சந்தேகமாகி உள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது. ஆனால் நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் திலக் வர்மாவின் இடத்தில் களமிறக்கப்படாமல் இஷான் கிஷன் மூன்றாம் இடத்தில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடரில் இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் விளையாடினாலும் திலக் வர்மா ஒருவேளை உலக கோப்பை தொடரை தவறிவிடும் பட்சத்தில் அவரது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் விளையாட வேண்டும் என்று தனது கருத்தினை வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் திலக் வர்மாவின் இடத்தில் இந்திய அணி இஷான் கிஷனை பயன்படுத்தி வருகிறது. ஆனால் இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. உள்ளூர் போட்டிகளில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததாலே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் இந்த இடத்தில் விளையாடினால் தான் பெஸ்ட் – முகமது கைப் கருத்து

ஆனால் என்னைப் பொருத்தவரை திலக் வர்மாவின் இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட வேண்டும். ஏனெனில் 4 ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் போட்டிகளும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது எனவே அவரே திலக் வர்மாவின் இடத்தில் களமிறக்க வேண்டும் என வருண் ஆரோன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -