சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் 2026 டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீண்டும் ஒருமுறை இந்த தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
சூரியகுமார் யாதவ் இந்த முடிவை எடுக்க வேண்டும் : முகமது கைப்
அந்தவகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான பலமான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் டி20 தொடருக்கு முன்னதாக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது அவர் 22 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் சூரியகுமார் யாதவ் எந்த இடத்தில் பேட்டிங் செய்தால் அது சிறந்ததாக இருக்கும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவின் பேட்டிங் பார்ம் மிகவும் மோசமாக உள்ளது. பவர்பிளே ஓவர்களுக்குள் விக்கெட் விழுந்தால் மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவை அனுப்பும் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் களமிறங்குகிறார். ஆனால் அவர் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்க கூடாது. ஏனெனில் அவர் மூன்றாவது வீரராக வழக்கம் போல் வரும் பட்சத்தில் சில பந்துகளை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டு செட்டில் ஆக முடியும்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் இந்த இடத்தில் தான் பேட்டிங் செய்யனும் – வினய் குமார் கருத்து
அப்படி செட்டில் ஆகிவிட்டால் 50 முதல் 60 ரன்கள் வரை அவரால் எளிதாக அடிக்க முடியும். எனவே சூர்யகுமார் யாதவ் என்னை பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும். அதுதான் சரியான இடம் அவர் அதிரடியான ஆட்டத்தை பவர்பிளே ஓவர்களில் வெளிப்படுத்தி விட்டால் பின்னால் வரும் வீரர்கள் அழுத்தம் இன்றி விளையாட முடியும் என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



