இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடருக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சூரியகுமார் யாதவ் இந்த இடத்தில் தான் விளையாடனும் : வினய் குமார்
அதற்கு முன்னதாக தற்போது இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணத்தில் முன்னிலை வகிக்கும் வேளையில் இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்? என்பது குறித்த சில கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான வினய் குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை அணியின் முக்கியமான வீரர் சிறந்த இடத்தில் விளையாட வேண்டியது அவசியம்.
அந்த வகையில் சூரியகுமார் யாதவ் டாப் ஆர்டரில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் தான் கேப்டன் பதவி ஏற்றதிலிருந்து தனக்கு முன்னதாக மற்ற வீரர்களை பேட்டிங் செய்ய அனுப்பி நான்காவது இடத்தில் விளையாடி வருகிறார். இப்படி கேப்டனாக ஒரு வீரரை முன்னால் அனுப்புவது நல்ல குணம் தான்.
ஆனால் தனக்கு சிறந்த இடம் எதுவோ அதை தேர்வு செய்து விளையாட வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடினால் தான் நன்றாக இருக்கும். ஏனெனில் அவர் கடந்த காலங்களில் அந்த இடத்தில் தான் அற்புதமான ரன் குவிப்பை வழங்கினார்.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவோட இந்த ஒரு திறமையை யாராலும் மேட்ச் பண்ண முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து
எனவே அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் துவக்க வீரராகவும், சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திலும் விளையாட வேண்டும். நான்காவது இடத்தில் திலக் வர்மா விளையாடலாம். அவர் இல்லாவிட்டால் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என வினய் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.



