சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி தொடர் என்பதினால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. அதேவேளையில் ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்டிக் பாண்டியாவின் திறமையை பாராட்டிய : ஆகாஷ் சோப்ரா
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த டி20 தொடரின் முதலாவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ள வேளையில் இன்று ராய்ப்பூர் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற காத்திருக்கிறது.
இந்நிலையில் முதலாவது போட்டியின் போது விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் திறமை குறித்து முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா சில பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியை பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியா இல்லாமல் அது ஒரு முழுமையான அணியாக இருக்காது.
ஏனெனில் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். அவரால் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக கை கொடுக்க முடிகிறது. அவரைப் போன்ற வேறு ஒரு வீரர் இந்திய அணியில் இல்லை என்கிற அளவிற்கு அவர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். நமது அணியில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற மிகச் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கலாம்.
இதையும் படிங்க : ஒருவேளை இன்னைக்கு அக்சர் படேல் விளையாடலனா இவருக்கு தான் அந்த வாய்ப்பு – விவரம் இதோ
அதேபோன்று மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கலாம். ஆனால் ஹர்திக் பாண்டியாவை போன்று பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் இல்லை. ஹார்டிக் பாண்டியா பேட்டை எடுத்தால் அதிரடி காண்பிக்கிறார். பந்தை எடுத்தால் எந்த நேரத்திலும் பந்துவீச முன் வருகிறார். அந்த அளவிற்கு இரண்டையுமே அவர் அற்புதமாக கையாள்கிறார் என ஆகாஷ் சோப்ரா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



