- Advertisement -
ஐ.பி.எல்

என்னது அவுட்டானதால நான் அழுதேனா.. முதல் போட்டியில் நடந்தது இதுதான் – வைபவ் சூர்யவன்ஷி அளித்த பதில்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் அனைத்து அணிகளும் அறிமுகமாகி மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் குறிப்பிட்ட சில இளம் வீரர்களின் செயல்பாடு அவர்களை ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல் அணியின் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி அவரது அதிரடியான பயமற்ற ஆட்டத்தின் மூலம் பெரியளவில் அனைவரது மத்தியிலலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

என்னது நான் அழுதேனா? தனது முதல் ஆட்டம் குறித்து பேசிய : வைபவ் சூர்யவன்ஷி

ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று துவக்க வீரராக இடம்பிடித்த வைபவ் சூர்யவன்சி 14 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அதுமட்டுமின்றி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்தும் மிரட்டியிருந்தார்.

- Advertisement -

அதன்பின்னர் ஒரு சில ஆட்டங்களில் அதிரடியான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மிக குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும், ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார். அதுமட்டும் இன்றி குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார்.

இப்படி ஒரே ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பாராட்டப்பட்டு வருகிறார். தற்போது வரை தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் நிச்சயம் நீண்ட ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகும் வீரராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் அறிமுகமான அந்த போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறிய போது கண் கலங்கி சென்றபடியான வீடியோ வைரலானது. அதனை பார்த்த பலரும் வைபவ் சூரியவன்ஷி ஆட்டமிழந்ததற்காகவே அழுது கொண்டு வெளியேறுகிறார். இந்த சிறுவன் பாவம் என்பது போன்ற தங்களது அனுதாபங்களை பாராட்டுகளாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள வைபவ் சூரியவன்ஷி கூறுகையில் :

இதையும் படிங்க : 3 ஆண்டுகள் கழித்து பி.சி.சி.ஐ-யின் கவனத்தை ஈர்த்த கே.எல் ராகுல்.. இதுதான் கம்பேக் – விவரம் இதோ

நான் எப்போது அழுதேன்? நான் அறிமுகமான போட்டியின் போது ஆட்டமிழந்து வெளியேறுகையில் மின்விளக்குகள் மற்றும் எல்.இ.டி திரைகளை பார்த்தேன். அதிலிருந்து வரும் பிரகாசமான வெளிச்சம் எண் கண்களை சிமிட்ட வைத்தது. அதனால் கண்களை தேய்த்து கொண்ட படியே வெளியேறினேன். ஆனால் அதனைப் பார்த்த பலரும் நான் அழுகிறேன் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் அது உண்மை அல்ல மின்விளக்கு வெளிச்சத்தின் காரணமாகவே நான் கண் துடைத்த படியே வெளியேறினேன் என வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -