3 ஆண்டுகள் கழித்து பி.சி.சி.ஐ-யின் கவனத்தை ஈர்த்த கே.எல் ராகுல்.. இதுதான் கம்பேக் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பத்து அணிகளில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஒன்று. இந்த ஆண்டு அக்சர் பட்டேல் தலைமையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 12 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்று 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

பி.சி.சி.ஐ-யின் கவனத்தை ஈர்த்த கே.எல் ராகுல் :

இன்னும் அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் அந்த 2 போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பையும் உறுதிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் டெல்லி அணியானது அடுத்ததாக மும்பை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுல் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 493 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் பிசிசிஐ-யின் பார்வை அவரது பக்கம் திரும்பி உள்ளதால் அவருக்கு இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கே.எல் ராகுல் இந்திய அணிக்காக கடைசியாக 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது டி20 போட்டிகளி விளையாடியிருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு கிட்டத்தட்ட அவரது சர்வதேச டி20 முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. ஏனெனில் இளம் வீரர்களின் வருகை காரணமாக அவரது டி20 வாய்ப்பு முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இவ்வேளையில் டெல்லி அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவர் எந்த இடத்திலும் களமிறங்கி மிகச் சிறப்பாக செயல்பட கூடியவர் என்பதனால் மீண்டும் டி20 போட்டிகளில் அவரை கொண்டு வரவுள்ளதாக பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒன்னுக்குமே வேலைக்காகாத சுமாரான இலங்கை வீரரை அணியில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

இதன் காரணமாக 3 ஆண்டுகள் கழித்து தரமான கம்பேக்கை கொடுக்க காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல் ராகுல் 72 போட்டிகளில் 2 சதம் மற்றும் 22 அரைசதம் என 2265 ரன்களை 37 ரன்கள் சராசரியுடனும், 139 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement