கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட முதல் மூன்று அணிகளாக குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்று விட்டன. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள ஒரு இடத்திற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இலங்கை வீரரை அணிக்குள் கொண்டுவந்த மும்பை இந்தியன்ஸ் :
அந்தவகையில் அந்த கடைசி இடத்திற்காக மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் மும்பை அணி எளிதில் வெற்றி பெற்று நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தற்காலிகமாக ஐ.பி.எல் தொடரானது ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் அவர்களது தாயகத்துக்கு திரும்பினர்.
பின்னர் இந்தியாவில் உள்ள சூழல் மற்றும் சர்வதேச போட்டிகளின் அட்டவணை ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்களால் எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. அந்த வகையில் பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த ஐபிஎல் தொடருக்கு திரும்ப முடியாத நிலையில் மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சிலரும் எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினர்.
அந்த வகையில் வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன், கார்பின் போஷ் ஆகியோர் எஞ்சியுள்ள இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகவே அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் கிலீசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு கூடுதல் வீரராக இலங்கை வீரரை மாற்றுவீரராக மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அப்படி மும்பை அணி மாற்றுவீரராக கொண்டு வந்த இலங்கை வீரரால் தான் அந்த அணிக்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக அந்த இலங்கை வீரரை எதற்காக ஒப்பந்தம் செய்தோம் என்று தெரியாமலே அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வகையில் 27 வயதான இலங்கை வீரர் சரித அசலங்காவை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக விளையாடி வரும் அவர் டி20 போட்டிகளில் 58 ஆட்டங்களில் விளையாடி இருந்தாலும் வெறும் 6 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார்.
இதையும் படிங்க : தோனி சீக்கிரம் இந்த முடிவை எடுத்தே ஆகனும்.. இதுதான் சரியான அவருக்கு சரியான நேரம் – ஜோகிந்தர் சர்மா
அதுமட்டும் இன்றி அவர் பெரிய ஹிட்டரும் கிடையாது. பெரிய அளவில் ஸ்ட்ரைக் ரேட்டும் கிடையாது. இப்படி சர்வதேச போட்டிகளில் இதுவரை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு சுமாரான வீரரை அணிக்கு கொண்டு வந்துள்ளனர். என்னதான் சரித் அசலங்கா மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் அவரால் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



