- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்காக விளையாடப்போகும் வைபவ் சூர்யவன்ஷி.. எப்போ தெரியுமா? – வெளியான அட்டவணை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தியாவில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் துவக்க வீரராக விளையாடிய 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி இந்த தொடரில் 15 ஆட்டங்களில் விளையாடி 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 776 ரன்கள் குவித்து நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

வைபவ் சூர்யவன்ஷி விளையாடப்போகும் போட்டி :

அதோடு இந்த ஒரு ஐபிஎல் தொடரில் 5 விருதுகளை வென்று வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராகவும் மாற காத்திருக்கிறார். நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்ததால் விரைவில் அவரை தேசிய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் பி.சி.சி.ஐ அவருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பை வழங்க காத்திருக்கிறது. இவ்வேளையில் இந்திய அணியில் அவரை சேர்க்கும் முன்னதாக தற்போது இந்திய ஏ அணியில் அவரை சேர்த்துள்ள பி.சி.சி.ஐ இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் பங்கேற்று விளையாட வைக்கவுள்ளது.

ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய ஏ வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த வேளையில் இந்த போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் இந்திய ஏ அணியானது இலங்கை ஏ அணிக்கு எதிராக ஜூன் 9 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளிலும், ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக ஜூன் 11 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளும் மோத இருக்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலா இந்த பையனை கேப்டனா போடுங்க – ரோஹித் சர்மா ஆதரவு

இந்த நான்கு போட்டிகளும் தம்புலா மைதானத்தில் இந்திய நேரப்படி 11 மணிக்கு துவங்குகிறது. 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி எவ்வாறு விளையாடப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -