ஐ.பி.எல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது படுமோசமான தொடராக அமைந்தது. ஏனெனில் இந்த தொடரில் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி 10 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த சில ஆண்டுகளாகவே கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது பலமான வீரர்களை தங்களது அணியில் வைத்திருந்தும் கோப்பையை கைப்பற்றாதது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியிலும் இன்றி நிர்வாகத்தினர் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
மும்பை அணியின் கேப்டன் மாற்றும் குறித்து : ரோஹித் சர்மா பேச்சு
இதன் காரணமாக 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக ஹார்திக் பாண்டியா அந்த அணியில் இருந்து விலக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாகவே கடுமையான மன உளைச்சலில் இருக்கும் ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத் அணியிலிருந்து டிரேடிங் முறையில் கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் அவரது தலைமையின் கீழ் மும்பை அணி தொடர்ச்சியாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2026 ஐ.பி.எல் தொடரின் பாதியிலேயே ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக திலக் வர்மாவை கேப்டனாக கொண்டு வரும்படி ரோகித் சர்மா நிர்வாகத்தினரிடம் ஆதரவு தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த 2026 ஐபிஎல் தொடரின் போது ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சியில் மும்பை அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தபோது ஹார்திக் பாண்டியா ஒரு கட்டத்தில் காயம் காரணமாக சில போட்டிகளை தவற விட்டார்.
இதையும் படிங்க : 2 வருஷம் புவனேஷ்வர் குமார் எங்களுக்காக இதை செய்திருக்காரு.. டாப் கிளாஸ் பவுலர் – ஆண்டி பிளவர் பாராட்டு
இதன் காரணமாக அணி நிர்வாகத்திடம் பேசிய ரோஹித் சர்மா ஹார்டிக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு எதிர்காலத்தை கணக்கில் கொண்டு திலக் வர்மாவை கேப்டனாக நியமியுங்கள் என்று கூறியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொடரின் இடையே ஹார்டிக் பாண்டியா விளையாடாத போட்டிகளில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



