அவருக்கான முழு செலவையும் நான் ஏத்துக்குறேன். தேவைன்னா அதையும் பண்றேன் – உத்தரகாண்ட் முதல்வர் வாக்குறுதி

Pushkar
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தற்போது டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் கார் தடுப்புச் சுவரின் மீது மோதி தீப்பிடித்து எறிந்தது. அதிலிருந்து தப்பித்த ரிஷப் பண்ட் பொதுமக்களின் உதவியுடன் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து அவரது உடல்நிலை குறித்த பல அறிவிப்புகள், விபத்து குறித்த விவரங்கள் அவர் காயத்திற்கான சிகிச்சை என பல்வேறு தகவல்களும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மோசமான கட்டத்தில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட் நலமுடன் இருப்பதாகவும் அவர் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் கார் விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கி இருந்தாலும் அவரது உடலில் எந்தவித எலும்பு முறிவோ மற்றும் தீக்காயமோ ஏற்படவில்லை என மருத்துவர் உறுதி செய்துள்ளனர். ஆனால் அதேவேளையில் தலை, கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள மேக்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பிரார்த்தனைகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தற்போது ரிஷப் பண்டிற்கு உதவ தான் முன் வருவதாக அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல்நிலை குறித்து நான் நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் ரிஷப் பண்டின் இந்த விபத்து தன்னை வருத்தம் அடையச் செய்துள்ளதாகவும் அவருக்கான சிகிச்சைக்கு உண்டான அனைத்து செலவுகளையும் உத்தரகாண்ட் அரசின் நிர்வாகமே ஏற்கும் என முதல்வர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஒருவேளை அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை எங்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை அனுப்பி அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது.

இதையும் படிங்க : கிரிக்கெட் பார்க்காததால் அவர் ரிஷப் பண்ட்ன்னு தெரியாது – அவசர நேரத்தில் காப்பாற்றிய பின்னணியை பகிர்ந்த பஸ் டிரைவர்

எனவே ரிஷப் பண்டிற்கு எவ்வளவு செலவானாலும், எங்கு சிகிச்சை பெற விரும்பினாலும் நாங்கள் இருக்கிறோம் என்று உத்தரகாண்டின் முதல்வர் புஷ்கர் ரிஷப் பண்டிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் தூதராகவும் அவர் ரிஷப்பட்டை நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement